01-20-2006, 02:50 PM
rajathiraja Wrote:நன்றி நாரதரே. நான் தர்க்க ரீதியாக இந்த விழய்த்தில் வாதாடுவது சரியில்லை. அவர்கள் ஆரியரே திராவிடரோ எல்லோரும் ஒரே தட்டில் தான் இபோது இருக்கிறோம். பார்பானியத்தை மீண்டும் எடுக்காத வரை அவர்களை பிரிப்பது சரியா? எனக்கு தெரிந்து இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் பிராமிணர் ஆதிக்கம் என்பது எனக்கு தெரிந்து இல்லை. அவர்களும் ரிச்ர்வேஷன் போன்ற விழய்ங்களில் மாட்டி கொண்டு தான் இருக்கிறார்கள்.இன்னும் சில பேர் வந்தேறி என்ற முறையில் பேசி கொண்டு இருப்பது சமுகத்தையே பிரிவு படுத்தும் முறை போல் உள்ளது. உங்கள் கருத்து என்ன? என நண்பரிடம் இருந்து இந்த ஆராய்ச்சி பற்றி செய்தி வந்தது நான் அதை தெரிவு படுதுகிறேன்.
முதலில் எல்லோரும் ஒரே தட்டில் என்பது எவ்வாறு என்று கூறுவீர்களா?
அப்படி ஆயின் ஏன் தேவை இட ஒதுகீடு ஏன் வெவ்வேறு அரசியற் கட்ச்சிகள் இருகின்றன.ஏன் தமிழ் நாடு தனக்கு தேசிய உற்பத்த்யில் அதிக பங்கு வேணும் என்கிறது?ஏன் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருகின்றன.ஏன் நகரங்களில் இருப்பவர்களுக்கும் கிராமங்களில் இருப்பவர்களுக்கும் ஏற்றத் தாழ்வுகள் இருகின்றன?
ஏன் அசாம் பெற்றோலிய வருமானதில் தனக்கு பங்கு கேட்கிறது?ஏன் தமிழ் நாட்டு முதலமைச்சர் தமிழ் நாஅட்டு மீனவர்களைக் காப்பாற்றுங்கள் என்று கூக்குரல் இட வேண்டும்?உங்கள் வெளியுறவுக் கொள்கையை யார் தீர்மானிக்கின்றனர்?
ஏன் பாரதிய ஜனதா இந்துதுவக் கொள்கைக்கை முன் நிறுத்துகிறது?பாரதிய ஜனதாவின் தலைவர்கள் ஏன் பார்ப்பனராக இருகின்றனர்?
ஏன் இந்து ராம்,சோ பொன்ரோர் ஈழத் தமிழ்ர் மேல் இவ்வளவு விசமத்தைக் கக்குகின்றனர்?ஏன் தமிழ் பிராமணர் சங்கம் அமைகின்றனர்?ஏன் இவ்வளவு சாதியச் சங்கக்ங்கள் உள்ளன?
இவற்றிற்கெல்லாம் ஒரே விடை, சமூகம் என்பது ஒன்றல்ல பல்வேறு வர்க்க வேறுபாடுகள் ,பொருளாதார அரசியற் சக்திகள் பொருளாதார நலங்களுக்குக்காக் போட்டி போடுகின்றன என்பதுவே.
தமிழ் நாட்டில் ஏற்பட்ட திராவிட இயக்கத்தாலேயே நிலப்பிரபதுவ, சாதிய அடக்குமுறை கட்டுப் பாட்டுக்குள் வந்தது.உயர் சாதியினரின் அடக்குமுறைக்கு எதிராகத் இயக்கங்கள் எழுந்ததன.இன்றும் இந்த சுரண்டல் அசக்குமுறை கிராமமங்களில் உள்ளது, நகரங்களில் வெளிப்படயாகத் தெரிவதில்லை காரணம் நகர பொருளாதார அமைப்பு முறை நிலப்பிரபத்துவ முறமையில் இருந்து வேறு படுகிறது.
இங்கே வேறு பாடு பொருளாதாரச் சுரண்டலாலேயே வருகிறது. சம நிலை என்பது பொருளாதார்ச் ச்மனிலயாலேயே ஏற்படும்.அது மத்தியில் உங்களுக்கு அதாவது தமி நாட்டுக்கு சம உரிமை இருகிறதா,இந்தியக் கூட்டமைவில் உங்களுக்கு சம அரசியல் பலம் இருகிறதா ?உங்கள் சமூகத்தில் எல்லத் தரப்பினருக்கும் சம வாஇப்புக்கள் வசதிகள் இருகிறதா என்பதில் தான் தங்கி உள்ளது.
மட்டுறுதினர்களுக்கு ஒரு வேன்டுகோள் இங்கே நடக்கும் கருத்தாடலுக்கு சம்பந்தமில்லாமல் இடயில் புகுந்து சீண்டும் நோக்கிலான கருத்துக்களை எழுதி திசை திருப்புபவரை வெளி யேற்றவும்,அல்லது இவருக்கு தகுந்த பதில் அவரது பாணியிலேயே வைக்க வேண்டி வரும்.

