01-20-2006, 02:40 PM
மின்னஞ்சல் சுற்றில் எனக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு கட்டுரையின் சிறுபகுதி. இத்தலைப்புக்குள் பொருந்தும் என்பதால் இணைக்கிறேன்.
<b>எழுதியவர்: பாலி -இலண்டன்</b>
<b>எழுதியவர்: பாலி -இலண்டன்</b>
Quote:"சதிர்" என்றும், "தாசி ஆட்டம்" என்றும் அழைக்கப்பட்ட ஆடல் வடிவத்துக்கு "பரதநாட்டியம்" என்று பெயர்சூட்டி எழுபத்தைந்து ஆண்டுகள் ஆகப்போகிறது. ஈ. கிருஷ்ணையர், 1932ஆம் ஆண்டு சென்னை சங்கீத வித்வ சபையின் (மியூசிக் அக்கடெமி) வருடாந்த மாநாட்டில் இத் தீர்மானத்தைக் கொணர்ந்து நிறைவேற்றினார். அப்போது அவர் சங்கீத வித்வ சபையின் செயலாளராகவுமிருந்தார்.
பரதநாட்டியம் என்ற இந்தப் பெயரின் "பிதாமகராக" டாக்டர் வே. ராகவனும் ருக்மிணி அருண்டேலும் பின்னர் உரிமைகோரினார்கள். ஆனால், இவர்கள் இருவருமே இல்லை என்பதுதான் வாதம். 1932ஆம் ஆண்டில் ஓர் ஆராய்ச்சி மாணவராக இருந்த ராகவன், சங்கீத வித்வ சபையில் தீர்மானம் ஒன்றை வலியுறுத்தும் அளவுக்கு செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை என்றும், 1933ஆம் ஆண்டு மாநாட்டில் அவர் வாசித்த கட்டுரையிலேயே பரதநாட்டியம் என்ற பதத்தை அவர் முதன் முதலாக பயன்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.
1935ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி சங்கீத வித்வ சபையில் பந்தணைநல்லூர் மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் மாணவிகளான சபாரஞ்சிதம், நாகரத்தினம் ஆகியோரின் நடன நிகழ்ச்சியைப் பார்த்தபோதுதான் ருக்மிணி அருண்டேலுக்கு இந் நடனத்தின்மீதான நாட்டமே ஏற்பட்டது என்பது ருக்மிணி அருடண்டேல் தொடர்பில் வைக்கப்படும் வாதம்.
ஆக, பரதநாட்டியம் என்ற பெயரோடு இன்று இக்கலை வடிவம் சமூக அந்தஸ்தின் பெரும் சின்னமாக, எழுபத்தைந்து ஆண்டுகளை அண்மித்தாலும், இன்றும் இந் நடனத்தின் மேடைவடிவம் இரண்டு நூற்றாண்டுகால பாரம்பரியத்தை பேணிநிற்கிறது. சரபோஜி மன்னரின் (கி. பி. 1798 - 1832) ஆஸ்தான வித்வான்கள் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு என்ற தஞ்சை நால்வர்கள் வகுத்த அலாரிப்பு, ஜதிஸ்வரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா என்ற உருப்படி அமைப்பே ஒரு தனி பரதநாட்டிய நிகழ்வின் பந்தாவாக அமைகிறது.
ஜதிஸ்வரத்துக்குப் பின்னர் கவுத்துவமும், பதங்களுக்குப் பின்னர் ஜாவளியும் 19ஆம் நூற்றாண்டில் இப் பாரம்பரியத்தில் இயைபாகவே இணைந்துகொண்டவை.
இந்த பந்தாவில் குருவிடம் கற்றதோடல்லாமல், தாம் கற்ற பாணியில் தமக்கு ஒரு தனித்துவத்தை இன்று இக் கலையில் உன்னதமாக திகழும் கலைஞர்கள் ஒவ்வொருவருமே கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நல்ல பரதநாட்டிய நிகழ்ச்சி நமக்கு நன்கு பரிச்சயமானவையும், புதியவையுமான உருப்படிகளின் மிகச் சாதுரியமான இணைப்போடு அமைகிறது.
சம்பிரதாயமான பண்புகளை பெரிதும் மீறாமல், சிதைத்துவிடாமல், காலத்தின் சிருஷ்டிப்போடு பரதநாட்டியம் இன்று சர்வதேச அரங்கில் அதன் தனித்துவத்தை மிளிரவைக்கிறது. பாட்டு, பக்கவாத்தியம், உடை, ஒப்பனை, அரங்க அமைப்பு, ஒலி, ஒளி போன்ற அனைத்து அம்சங்களிலும் மேலான கவனம் செலுத்தப்படுகிறது.
....

