01-20-2006, 01:35 PM
rajathiraja Wrote:ஐயா! இது வந்தது உண்மை இதழில் அது இந்த விழயத்தில் நேர்மையான பதிவாக அதை கருத முடியாது. உண்மை இதழ் திராவிடர் கழத்தின் இதழ். ஆரியர் என்பது பொருள் என்ன?.அவர்கள் ஈரான் இருந்து சைபர் கணவாய் வழியாக வந்த்வர் என்று சொன்னது யார்? முல்லர் தானே.
ராஜாதிராஜா இங்கே தான் தவறு இழைகிறீர்கள் ,
இந்துதுவாதிகள் புனையும் கதைகளை நம்பும் நீங்கள்.,திராவிடற் கழக இதழ் வேதங்களைச் சுட்டிக் காட்டி எழுதும் கருதுக்களை எது வித காரணமும் இன்றி அது திக இதழ் அதனால் அதனைக் கருத்தில் எடுக்க மாட்டேன் என்று கூறுகிறீர்கள்.இது உங்களுக்கு நியாயமானதாகப் படுகிறதா.
எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.
திகவைப் பற்றியும் வீரமணி பற்றியும் விமர்சனம் எனக்கும் உண்டு.
ஒரு அரசியற் காரணுதிற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் வலுவிழந்து ஒரு நிறுவனமாக்கப் பட்டதில் எனக்கும் உடன் பாடு கிடயாது.
தமிழ் நாட்டில் அரசியற் கட்சிகள் எல்லாமே குடும்ப நிறுவனங்களாகவே உள்ளன.அது அதிமுக என்றால் என்ன திமுகா என்றால் என்ன திக என்றால் என்ன எல்லாம் ஒண்டு தான்.ஒரு அரசியல் இயக்கம் அரசியற் குறிக் கோளுடன் கொள்கைகளுடன் இயங்க வேண்டும் அது மக்கள் நலங்களை முன் நிறுத்த வேன்டும்,அப்போது தான் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
பெரியார் தொடக்கியதை தொடர்வதற்கு இன்றுள்ள முற்போக்கு அரசியற் சக்திகள் ஒன்று பட்டு வேலை செய்து ஒரு உண்மயான மக்கள் இயக்கதை கட்டி எழுபினாலேயே உங்களுக்கு விடிவு உன்று.அதில் நாம் தலை போடவில்லை அது உங்கள் பிரச்சினை.
உங்களை விட எனக்கு தமிழ் நாட்டில் அதிக அரசியற் தொடர்புகள் அனுபவங்கள் உள்ளதால் இதைச் சொல்கிறேன் ஒழிய உங்களை மட்டந்தடுவதற்காக அல்ல.உங்கள் மேல் எனக்கு உள்ள கரிசனைதான் அதற்கு காரணம் ,உங்களைத் தூற்றுவது எனது நோக்கமல்ல. நான் தமிழ் நாட்டு மக்களை நேசிக்கிறேன் காரணம் நான்
தமிழ் நாட்டில் பல தரப்பட்ட மக்களோடு பல மானிலத்தவரோடு பழகி இருக்கிறேன்.

