01-20-2006, 01:09 PM
rajathiraja Wrote:திரு நாரதரே நான் கொடுத்து இருந்த ஒரு இதற்க்கான இந்த ஆராய்சிக்கு எதிர் மறையான கருத்தை கொண்டது. நான் தெரிந்தெ தான் அதை கொடுத்து இருந்தேன்,
சில கேல்விகள்.
1.ஆர்யர் படையெடுப்பு என்பது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முல்லர் என்பாரால் அளிக்கபட்டது. இங்கு வந்து காலனி ஆதிக்கம் புரிந்த ஆங்கிலேயரக்கு நமது கலாசாரம் பற்றி சுய நலம் இல்லாமல் ஆராய்சி செய்ய தேவை இருக்காது. அவர்கள் இந்த மக்களை பிரித்து ஆள வேண்டும் என்ற நோக்கில் சொன்னது தான் ஆரியர் படையெடுப்பு. இதை நீங்கள் ஒப்பு கொள்கிறிர்களா?
2. திருபு படுத்த பட்ட நமது வராலாறை நாம் மீண்டும் சரி படுத்த ஆராய்சி செய்வது தவறா?
3. நிங்கள் சொன்னது போல சில பார்பான்களால் இந்த ஆராய்சி நடத்த படவில்லை. பொதுவாக மனித குலத்தின் மறபு அனுக்களை பற்றியான ஆராய்ச்சி.இதில் இந்துத்வா அமைப்பு பங்கு எதுவும் இல்லை.
4அந்த சொன்ன மாற்று கருத்துகள் எல்லாமே இந்த ஆராய்சி பற்றி தவறாக சொல்லுகின்றன். அவர்கள் நிங்கள் சொன்ன மாதிரி இந்த மாற்றம் எல்லாம் பாரதிய ஜனதா கட்சி செய்வாதக தவறாக நினைத்து கொண்டு அவசராமாக குறை கூறுகின்றன. உன்மையில் அவர்களுக்கு இதில் சம்மந்தம் இல்லை. அவர்களுக்கு அவ்வாறு செய்ய தெரிந்து இருந்தால் பாபர் மசூதியை இடித்து இருக்க மாட்டார்கள்.
ராஜாதிராஜா நான் சரித்திரா ஆராச்சிகள் பற்றி மேலே எழுதியதில் இருக்கு உங்கள் முதற் கேள்விக்கான விடை.சரித்திரம் வெல்லப் படுபவர்களாலேயே எழுதப் படுகிறது.ஒரு நிகழ்வை நிருபிப்பதற்கு அதற்கான ஆதாரங்களைச் சேர்ப்பதற்கு பொருளாதரபலம்.அரசியற் செல்வாக்கு, நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் ,ஆராய்வை மேற் கொள்வதற்கான கட்டுப்பாட்டு நிலப் பகுதி என்பன வேண்டும்.இவை எம்மிடம் இருந்தால் நாங்கள் எமக்கு ஏற்றவாறு வரலாற்றை வியாக்கியானப் படுத்தலாம்.முல்லர் மட்டும் ஆரியரைப் பற்றிக் கூறவில்லை.ஆரியர்கள் இருந்தார்கள் ஆண்டார்கள் என்பதற்கு வேதங்கள் முதற்கொன்டு இன்றிருக்கும் அவர்கள் வழித்தோன்றல்கள் வரை பல்லாயிரம் சான்றுகள் உண்டு.இவை இன்றும் இருக்கும் ஆதாரங்கள்.
இங்கே புதிதாக முளைத்தது இந்த மரபணு ஆராச்சி. நான் மேலே சுட்டிக் காடியதைப் போல் இந்தக் கட்டுக் கதை ஒரு அரசியற் தேவைக்காக கலிபோனியாவில் உற்பத்தியாக்கப்பட்டது.இது யாரால் ஏன் செய்யப் பட்டது என்ற விபரங்கள் நீங்கள் இணைதிருந்த இணைப்பிலேயே உள்ளன.இதை உருவாகியவர்களின் பின்புலம் இந்துதுவா என்பதுவும் அங்கே நிருபிக்கப் பட்டு உள்ளது.
இங்கே மரபணு ஆரைச்சி செய்தவர்கள் ஆரிய ஆகிரமைப்பை பற்றி ஆராய்வு செய்யவில்லை.அவர்கள் மனித குடிப் பரம்பலைப் பற்றியே ஆராய்வு செய்தனர்.அவர்கள் சுட்டிக் காட்டிய படி ஆராய்வின் தரவுகளில் உள்ள பிழயானது வரலாற்றுக்கு முந்திய பரம்பலயே எழுத்தமானதாகக் காட்டி உள்ளது.இதை வைத்துக் கொண்டு தான் இந்த இந்துதுவ வாதிகள் ஆரிய படயெடுப்பு நடக்கவில்லை என்று புலம்புகின்றனர்.இதை அந்த ஆய்வு செய்தவர்கள் ஒரு தரவாகக் கூறவில்லை.இப்படியான ஒரு தரவை அந்த ஆய்வு சொல்ல முடியாது காரணம் அதன் தரவுகளில் உள்ள முறமைப் (messurement error) பிழைகள் அதனைக் கூறக் கூடியவை அல்ல.
விதண்டாவாதம் செய்யாமல் நிதானமாக கருத்தாடும் உங்களைப் பாராட்டுகிறேன்.

