Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உடத்தலவின்ன வழக்கில் 5 பேருக்கு மரணதண்டனை-
#1
<b><span style='color:darkred'>உடத்தலவின்ன வழக்கில் 5 பேருக்கு மரணதண்டனை-

உடத்தலவின்ன படுகொலை வழக்கிலிருந்து முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை, அவரின் இரு புதல்வர்களான லொஹான் ரத்வத்தை, சானுக ரத்வத்தை ஆகியோர் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீபானி விஜேசுந்தர, சுனில் ராஜபக்ச ஆகியோர் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் பொதுத் தேர்தலின் போது கண்டி உடத்தலவின்ன பிரதேசத்தில் வானில் பயணித்த 10 முஸ்லிம் வாலிபர்களை சுட்டுக் கொன்றமை மற்றும் பலரைக் காயப்படுத்தியமை, கொலைக்குத் திட்டமிட்டமை, அதற்கு ஆதரவளித்தமை, கள்ள வாக்குப் பதிவு, வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை அபகரித்தமை உட்பட 72 குற்றங்கள் தொடர்பாக முன்னாள் பிரதிப் பாதுகாப்பமைச்சர் அனுருத்த ரத்வத்தை, அவரின் இரு புதல்வர்களான லொஹான் ரத்வத்தை, சானுக ரத்வத்தை, இராணுவ லெப்டினன் விஜேரத்ன, இராணுவ மற்றும் கொமாண்டோ படையினர் உட்பட 15 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீபானி விஜேசுந்தர, எரிக் பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ச ஆகியோர் முன்னிலையில் 2003 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் நாள் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது.

பின்னர் நீதிபதி எரிக் பஸ்நாயக்க மேல்முறையீட்டு நீதிபதியாக பதவியேற்றதையடுத்து இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது.

வழக்கு விசாரணையின் போது போதிய சாட்சியமின்மையினால் இரண்டு பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

தற்போது 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அனுருத்த ரத்வத்தை உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்</span>

[b]<i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
Reply


Messages In This Thread
உடத்தலவின்ன வழக்கில் 5 பேருக்கு மரணதண்டனை- - by மேகநாதன் - 01-20-2006, 09:12 AM
[No subject] - by Mathan - 01-20-2006, 02:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)