01-20-2006, 09:04 AM
[size=18]<b>மூத்த படைப்பாளி ஞானரதன் சாவு - வன்னியில் வணக்க நிகழ்வு </b>
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் நிறுவனத்தின் பல்வேறு படைப்புக்களிற்கு மூல கர்த்தாவாக திகழ்ந்த திரு. ஞானரதன் அவர்கள் சுகவீனம் காரணமாக நேற்று முந்நாள் கொழும்பில் சாவடைந்துள்ளார். இவரின் வணக்க நிகழ்வு நிதர்சனம் நிறுவனத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
சாவடைந்த இவரிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் வீர வணக்கம் செலுத்தியுள்ளனர்.
இவரிற்கான வணக்க நிகழ்வு இன்று நிதர்சனம் நிறுவனத்தில் காலை 8.00ம ணியளவில் நடைபெற்றுள்ளது. இதில் பொதுச்சுடரினை நிதர்சனம் நிறுவனத்தின் மகளீர் பொறுப்பாளப்பாளர் பிரேமிலா அவர்கள் ஏற்றிவைத்தார்.
தமிழீழ தேசயக்கொடியினை தமிழீழ அரசியற்துறை பொறுப்பாளர் திரு.சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏற்றிவைத்தார். திரு. ஞானரதன் அவர்களின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை ஊடகவியலாளர் திரு.விவேக் ஏற்றிவைத்தார்.
திருவுருவப் படத்திற்கான மலர்மாலையினை தமிழீழ அரசியற்துறை பொறுப்பாளர் திரு. சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் தமிழீழ தேசியத்தொலைக் காட்சி நிறுவனத்தின் பொறுப்பாளர் ஆகியோர் அணிவித்தனர். தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் போராளிகள், பொறுப்பார்கள், பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
யாழ். அளவெட்டியைச் சேர்ந்த திரு. ஞானரதன் அவர்கள் நிதர்சனம் நிறுவனம் தயாரித்த பல விவரணங்களின் மூலகர்த்தாவாகவும், நிதர்சனம் நிறுவனம் தயாரித்த குறும்படங்கள், முழுநீளப்படங்களின் ஆரம்பகர்தத்தாவும் ஒளிவீச்சு சஞ்சிகையின் தொடக்குனர்களில் ஒருவரும், தமிழீழ தேசியத்தொலைக்காட்சியை ஆரம்பிப்பதில் முன்நின்றவர்களில் ஒருவருமான தலைசிறந்த படைப்பாளியாவார்.
இவரது சிறந்த படைப்புக்களிற்காக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பலமுறை பரிசில்களை வழங்கி மதிப்பளித்துள்ளார்.
இவரிற்கு ஸ்ரீலங்காவின் முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க கலாகீர்த்தி என்ற விருதினை வழங்க அழைத்தபோது திரு. ஞானரதன் அவர்கள் அதனை வாங்க மறுத்தமை குறிப்பிடத்தக்கது.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>

"
"
"