01-20-2006, 08:32 AM
<b><span style='font-size:25pt;line-height:100%'>இராணுவ அடாவடித்தனங்கள் காரமாணமாக திருமலையில் இருந்து 250 குடும்பங்கள் வாகரைக்கு இடப்பெயர்வு </b></span>
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இராணுவ கெடுபிடிகள் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்த 250 குடும்பத்தினர் மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் தங்கியுள்ளனர்.
இவர்களின் 50 குடும்பத்தினர் தமது நண்பர்கள், உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர் ஏனைய 200 குடும்பத்தினரும் வாகரை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய ஏற்பாடுகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவத்தினரின் பெரும் அச்சுறுத்தல்களையும், அடாவடித்தனங்களும், கொலை மிரட்டல்களையும் தாங்க முடியாமலேயே தமது உயிரையாவது காப்பாற்றும் நோக்கில், பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி வந்ததாகவும், தொடர்ந்தும் வெருகல் ஆற்று வழியாக பல குடும்பங்கள் தங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>

"
"
"