01-20-2006, 05:02 AM
தூயவன் Wrote:சுடர் Wrote:kuruvikal Wrote:சைவத்தையும் தமிழையும் தமிழர்களையும் பிரிக்க நினைத்தால்..உங்களுக்கு என்று எதுவும் இருக்காது...அதுதான் நாவலர் அன்றே சொல்லிட்டார் சைவமும் தமிழும் தமிழரின் இரு கண்கள் என்று...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பைபிளை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்து தமிழர்கள் தமிழ்மொழியில் பைபிளை அறியவைத்தவரும் நாவலர் என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
யார் அதை மறுத்தது. சைவத்தை எப்படி மதித்தாரோ, அவ்வாறே பிறரின் மதங்களையும் நாவலர் மதித்தார். அவர் வெறுத்தது என்னவென்றால் அக்காலப்பகுதியில் தொழிலுக்காகவும், பணத்துக்காகவும் கடவுளை விலை கொடுத்து வாங்குவதை. கடவுளை பின்பற்றுவர்களை விலை கொடுத்து வாங்கலாம் என்றால் கடவுள் என்ற சொல்லில் ஒரு அர்த்தமும் இல்லையே!
இப்பொழுதும் வேறு விதமாக மதம் மாற்றப்படுகிறது. கிழக்குத் தமிழ் ஈழத்தில் கஸ்டப்படும் மக்களின் சிறுவர்களுக்கு வெளினாட்டு சமய அமைப்புக்கள் உணவு, உடைகள் வழங்கியபின் சிறுவர்களிடம் உங்களுக்கு உணவு தந்தது யார்? என்று கேட்க, சிறுவர்கள் ' நீங்கள் தான் தந்தீர்கள்' என, அதற்கு அவ்வமைப்புக்கள் 'இல்லை, (தங்களின் கடவுளின் பெயரினைச் சொல்லி) தந்தது' என்று சொல்லி மதமாற்றங்கள் நடைபெறுகின்றது. பல உதவியமைப்புக்களையும், சிறுவர் பராமரிப்பு நிலையங்களினையும் இச்சமயத்தினர் எடுத்து தங்களின் சமயப் பெயர்களில் நடத்தி வருகிறார்கள். இங்கும் மதமாற்றம் நடைபெறுகிறது.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 