01-20-2006, 04:32 AM
kuruvikal Wrote:இதெல்லாம் சுத்த வீராப்பு வாதங்கள். ஈழத்தமிழர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டோடு மட்டுமல்ல தென்னிந்தியத் தொடர்பு உள்ளவர்கள். ஈழத்தமிழர்களிடம் கேரளத் தொடர்பும் இருக்கிறது. குறிப்பாக உணவுப்பழக்க வழக்கம் கேரளா சார்ந்து இருக்கிறது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்கள் பேசும் மொழி கொண்டு அனைத்தும் தென்னிந்திய திராவிடர் (தமிழர்கள் உள்ளடங்கலாக) வழிவந்ததுதான். ஈழத்தமிழர்களின் வேர் அங்குதான் ஆரம்பம். இல்லை ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள் என்றால்.. ஈழத்தமிழர்களுக்கான மொழி மற்றும் வாழ்வுக்கான தொல்பியல் சான்றுகள் ஏதேனும் விசேடமாக இருக்கிறதா..??! இலங்கையில் சிங்களவர்கள் வரமுன்னர் தமிழர்கள் குடியேறி இருக்கலாம்...அதற்காக அவர்கள் தான் பூர்வகுடிகள் என்று சொல்ல சான்றுகள் இல்லை. எனவே தற்போதைய நிலவரப்படி ஈழத்தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு மூலவேர் தென்னிந்தியா சார்ந்துதான் உள்ளது. அங்குதான் பல ஆதாரங்களும் பொதிந்து கிடக்கிறது. ஈழத்தமிழர்களின் தற்கால ஆய்வுகள் பார்ப்பர்ணியக் கண்ணோட்டத்தில் அமையாமல் புவியியல் ரீதியான பாரம்பரிய தொடர்புகள் இணைப்புக்கள் சார்ந்து ஆழமாக தமிழகத்தோடு ஒன்றித்து செய்யப்பட வேண்டிய ஒன்று..! அப்போதுதான் ஈழத்தமிழர்களின் உண்மை இருப்புக்கான ஆதாரங்கள் வெளிப்படும். இல்லை வெறும் கட்டுரைகளை எழுதி அடாத்தாக அது ஈழத்தமிழன் சொந்தம் என்று பிதட்டித்திரிய வேண்டியதுதான். உலகம் ஏன் தமிழகமே அதைக் கண்டு கொள்ளாது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஈழத்தமிழரின் பழக்கவழக்கங்கள் கேரள மக்களிடம் இருப்பது என்னவோ உண்மைதான். கேரளத்தின் தோற்றத்தினை அல்லது அப்பகுதியின் மொழி தமிழ்மொழியில் இருந்து பிரிந்து உருவாகியது என்ற விடயமும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவ்வாறு இருக்கும் போது பூர்வீகமாக ஈழத்தில் இருக்கும் தமிழர்பற்றி குதர்க்கமாக கேட்கிறீர்களே. இன்னும் கொஞ்சம் என்றால் உலகில் மனிதன் தோன்றினானா அல்லது வேறு இடத்திலிருந்து பூமியில் குடியேறினானா என்று கேட்டு ஆதாரம் கேட்பீர்கள் போல் உள்ளதே. :roll: :roll:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 