01-20-2006, 04:14 AM
KULAKADDAN Wrote:ஆரூரன் பலவிடயங்களை விளக்கமாக எழுதிவருகிறீர்கள். நல்லவிடயம். நீங்கள் சொல்வது போல் பலவிடயங்களை ஆரியரிடம் இருந்து வாங்கியதாக சொல்லி எம்மை நாமே தாழ்த்தி/ பிழையாக வழிநடத்தி எமது பாரம்பரியத்தை இழந்துகொண்டிருக்கிறோம். ஆரியர்/திராவிடர் கலப்பு என்பது 3000 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய துணைக்கண்டத்தில் நடந்துவருவது. கலப்பு நிகழும்போது இரண்டு பக்கத்துவிடயங்களும் எதற்கு எது மூலம் என்று தெரியாத நிலை ஏற்படுவது சாத்தியமே. பல வழிபாட்டு, கலாச்சார நடைமுறைகள் ஆரியரை பெரும்பான்மையாக கொண்ட வட இந்தியரிலும் வேறுபட்டு தான் காணப்படுகிறது. இருந்தாலும் எம்மவர்களில் பலர் எமது நடைமுறைகள் ஆரியரில் இருந்து வந்தவை என சொல்லி சப்பைகட்டு கட்டுவதை பார்க்க வேதனையாக இருக்கும்.
வல்லவன்/ ஆளும் இடத்தில் இருப்பவன் எல்லாம் தனதே என வகுத்தது போல் எமது விடயங்களும் ஆரிய சாயம் பூசப்பட்டிருக்கலாம். ஏன் எனில் அவர்கள் அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் இருந்தார்கள்/இருக்கிறார்கள்.
உங்கள் கட்டுரைக்கு ஒரு சம்பந்தமில்லவிட்டாலும் எமது வாழ்நாள் உதாரணம் ஒன்றை சுட்டிகாட்டுவது நல்லதாக இருக்கும்.
கதிர்காமம் முருகன் ஆலயம் திருப்புகழில்?? சுட்டப்பட்ட ஆலயம். இன்று முழுக்கமுழுக்க சிங்களமயப்பட்டு போன ஆலயமாக இருப்பது மட்டுமல்ல முருகன் தங்கள் இனப்பெண்ணான வள்ளியை தான் மணம் முடித்தார் என கதை சொல்லும் அளவுக்கு சிங்களவர்களின் கருத்து திணிப்பு இருக்கிறது.
அதே போன்று பலவிடயங்கள் கடந்த காலத்திலும் நடந்திருக்கும் சாத்தியப்பட்டை மறுபதற்கு இல்லை.
<b>தவறுக்கு வருந்துகிறேன். ஆரூரன் எனும் பெயரை அரவிந்தன் என குறிப்பிட்டுவிட்டேன். அதை திருத்தம் செய்துள்ளேன்.</b>
கதிர்காமத்தில் அதுமட்டுமல்ல சூரன்கோட்டை என்னும் பகுதி இன்று ஒரு பெளத்த விகாரையாக மாற்றப்பட்டுள்ளது. கதிர்காமம் திட்டமிட்டு ஒரு பெளத்த பூமியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்கு சென்று பார்க்கும் போது தெரியும். அங்கு பெளத்தை எப்படி முன்னிலைப்படுத்துகிறார்கள் என்று.

