01-19-2006, 08:55 PM
காஞ்சி சங்கராச்சாரியாரும் ஆரியமும்
சில நாட்களுக்கு முன்னர் ஆற்றிய உரையில் காஞ்சி
சங்கராச்சாரியார் அவர்கள் இந்தியாவில் உள்ள
எல்லோரும் ஆரியரே. ஆரியர்கள் கைபர்-போலன்
கணவாய் வழியாக வந்தவர்கள் என்பது தவறு.
திராவிடர்-ஆரியர் என்பதெல்லாம் பொய்.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களைப்பிரிப்பதற்காகக்
கையாண்ட தந்திரம் என்றெல்லாம் சொல்லி
இருக்கிறார்.
இவருக்கு நம்முடைய பதில் இதோ.
இந்தியாவின் தேசிய கீதத்திலே சொல்லக்கூடிய
'பஞ்சாப சிந்து குஜராத மராட்டா
திராவிட உச்சல பங்கா'
என்ற வரிகளில் வரும் 'திராவிட'
எதைக்குறிக்கும்.
ஆரியர்களின் முதல் வேதம் என்ற கருதப்படும்
'ரிக்' வேதத்திலேயே ஆரியர் என்னும் பெயர்
இடம் பெற்றுள்ளது.
'இந்திரா! நீ ஆரியர்களையும், தஸ்யுக்களையும்
பிரித்துத்தெரிந்து கொள்'
'ஆரியர்களின் வீரத்தையும், புகழையும்
அதிகப்படுத்து, இந்திரா!'
'இந்திரன் எல்லாப்போர்களிலும், வேள்விகளைச்
செய்யும் ஆரியனைப்பாதுகாக்கிறான்'
'இந்திரன் தாசர்களைக்கொன்று ஆரிய
வர்ணத்தைப்பாதுகாப்பாக வைத்தான்'
இது போன்ற எண்ணற்ற வரிகள்
வெள்ளைக்காரர்களால் திணிக்கப்பட்டதா என்ன?
'ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்',
'ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்'
எனப்புறநானூறும்
'வட ஆரிய மன்னர் ஆங்கண்'
என சிலப்பதிகாரமும்
'ஆரிய இளவரசன் பிரகதத்தனுக்கு கபிலர்
அறிவுறுத்தியது' என குறிஞ்சிப்பாட்டும்
விளிப்பது எவரை என ஜெயேந்திரர்
விளக்குவாரா?
ஆதி சங்கரர் திருஞான சம்பந்தரை
'திராவிட சிசு' எனக்குறிப்பிட்டுள்ளாரே
அவர் என்ன வெள்ளைக்காரரா?
மனு தர்ம சாஸ்திரம்
'பவுண்டரம், அவுண்டம், திராவிடம், காம்போஜம்,
யவனம், பாரதம், சீனம் போன்ற தேசங்களை
ஆண்டவர்கள் சூத்திரர் ஆகிவிட்டார்கள்'
என்கிறதே, மனு என்ன பிரித்தனைச்சேர்ந்தவரா?
நன்றி:
உண்மை ஆன்லைன்.காம்
source: http://www.unmaionline.com
http://amalasingh.blogspot.com/2003_12_28_...gh_archive.html