01-19-2006, 07:44 PM
kuruvikal Wrote:kurukaalapoovan Wrote:கலாச்சாரங்கள் மொழிகள் பழக்கவழக்கங்கள் இந்திய ஆரியர் என்று கூறிக்கொள்ளும் பார்பான்கள் வந்தேறுகுடிகள் என்றும் திராவிடர்கள் பூர்விகக்குடிகள் என்று நிரூபிக்கிறது.
<b>கால ஓட்டத்தில் வந்தேறுகுடிகளின் மரபணுக்களும் சிலசந்ததிகளுக்குள் குடியேறிய நிலைக்கு ஏற்றமாதிரி மாற்றங்கொள்வதே இயற்கை. அதைவைத்துக் கொண்டு அவர்களும் அந்தப் பிரதேசத்து பூர்வீகர்கள் என்பது சிறுபிள்ளைத்தனமானது.</b>
குரங்கிற்கும் மனிதருக்கும் இடையில் கூட மரபணுக்களில் குறிப்பிட்ட வீதத்தில் ஒற்றுமை இருக்கு. உலகில் எல்லா மனிதர்களுக்கும் மரபணுக்களில் மேலும் அதிகப்படியாக குறிப்பிட்ட வீதத்தில் ஒற்றுமையிருக்கு. பின்னர் ஒவ்வொரு பிராந்தியங்களிலும் அந்த காலநிலை மற்றும் ஏனைய ஒத்த புறக் காரணிகளால் அந்தப் பிராந்திய மக்களின் மரபணுக்களில் சில விசேட ஒற்றுமை இருக்கும்.
இவை எல்லா மனிதர்களுக்கும் ஆரம்பம் ஒன்று என்றதை நிரூபிக்க உதவுகிறது. மனிதனும் ஒரு விலங்கு, உயிரினங்களின் பரிணாம வழர்ச்சியில் (evolution) மனிதர்களும் ஒரு அங்கம் தான் கடவு(ள்க)ளின் அவதாரங்கள் அல்ல என்று அறிந்து கொள்ள உதவுகிறது. ஒரு இனம் இன்னொரு இனத்தைவிட புனிதமானது என்ற பித்தலாட்டங்களை பெய்யாக உதவுகிறது.
வந்தேறுகுடிகளை பூர்வீகர்கள் என்று இன்னெரு பித்தலாட்டத்தை உருவாக்க அது உதவவில்லை.
இப்படித்தான் நல்லா பூச்சுத்துறீங்கள்..! அங்கு கருத்தில் எடுக்கப்பட்டது சாதாரண கலத்தின் கருவில் உள்ள டி என் ஏ அல்ல. இப்படியான தொல்பியல் பாரம்பரிய ஆய்வுகளின் போது இழைமணி எனும் கலப்புன்னங்கம் கொண்டிருக்கும் டி என் ஏயே கருத்தில் எடுக்கப்படும். அத்தோடு மனித ஆணின் வை குறோமோசோம் டி என் ஏயும் கவனத்தில் கொள்ளப்படும். இவை அதிகம் மாறல் அடைவதில்லை. குறுக்காலபோவாரே எல்லா இடமும் உங்கள் ஜம்பம் பலிக்காது. சும்மா பூச்சுத்திறதை நிறுத்துங்கோ..! கடைசில நவீன விஞ்ஞான செயன்முறைகளையே வாயால வார்த்தைகளால டிஸ்புறூவ் பண்ணிடுவள். இதாலதான் இன்னும் தமிழர்கள் படிச்சவன் எல்லாம் அறிவாளி என்று ஏமாந்து கொண்டிருக்கிறான். உண்மையில் படிச்சவன் மக்களை ஏமாத்தி தன்னை உயர்ந்தவனாகக் காட்டி சமூகத்தை ஏய்திக் கொண்டிருகிறான். இது மேற்குலக சமூகத்தில் வேகாது..! தமிழர்கள் மத்தியில் மட்டும் வேகும்...! அதனால்தான் கொஞ்சம் மாறுபட்ட கருத்துக்களைச் சொன்னதும் அதன் உண்மை யதார்த்தம் பார்க்காது அவன் புரட்சிவாதி புதுமைக் குஞ்சு என்று போற்ற..அவரும் ஏய்க்கும் மட்டும் ஏய்ச்சிட்டு.. போக வேண்டியதுதான். இதனால் சமூகத்தை தொடர்ந்து ஏமாற்றக் கூடிய நிலையில் வைத்துக் கொள்ளலாம்..! நீங்கள் பிழைத்தும் கொள்ளலாம். சமூகத்தை சிந்திக்கவே விடக்கூடாது..சுயமா..! சிந்திச்சிட்டா உங்கள் கருத்துக்களை எங்க வைக்கிறது..உங்களை பெருமையா காட்டுறது எங்க..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவி அண்ணா நான் படித்தவர் என்று ஜம்பம் காட்டவில்லை. எனக்கு உள்ள விளக்கத்தின் அடிப்படையில் தான் எழுத முடியும் அதைதான் செய்தேன். நான் மரபணு ஆராச்சியாளர் என்று இங்கு பூச்சுத்தவில்லை. உங்களுக்கு விளக்கம் கூடவாக இருந்தால் எல்லாருக்கும் விளங்கிறமாதிரி எழுதுங்கோவன். வாசித்து பயன் பெறலாம்.
ராஜாதிராஜா தந்தவற்றை வாசித்து விளங்கிக் கொண்டது...
பார்பனர்கள் வந்தேறு குடிகள் என்ற வாதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆராச்சியில் western Eurasia இல் கிடைத்த samples களிற்கும் பார்பான்களின் samples களின் இலும் உள்ள மரபணுக்களில் maternally inherited mitochondrial DNA(mtDNA) சார்ந்த ஒற்றுமைகளை (தொடர்புகளை) சான்றாக காட்டுவது தவறு என்று கூறவருகிறார்கள். காரணம் அவை haplogroup U தொடர்புகள். அவை 2 இனங்களுக்கும் (western Eurasia - Indo-Aryan/பார்பனர்கள் ) இடையிலான mtDNA அடிப்படையான தொடர்புகளில் கிட்டத்தட்ட 20 வீதமே என்கிறார்கள்.
அவர்கள் இந்தத் தொடர்பை 1.6million வருடங்களுக்கு முன்னர் உயிரினங்களின் பரிணாம வழர்ச்சியல் ஆரம் மனிதன் உருவான காலம் பழமையானது (Pleistocene) என்கிறார்கள். அதாவது இந்தக் காலப்பகுதி உயிரியல்ரீதியில் தற்காலத்து மனிதன் ஆசிய ஜரோப்பிய கண்டங்களுக்கு தன்னை விரிவாக்கம் செய்து கொண்ட காலப்பகுதி. ஆகவே இந்தக் காலம் சார்ந்த தொடர்புகள் ஆசிய ஜரோப்பிய பகுதிகளிற்கு முதலில் வந்தவர்கள் ஒரே இடத்திலிருந்த வந்த தொடர்பைத்தான் நிரூபிக்கிறது என்கிறார்கள்.
மேலும் haplogroup U சார்ந்த ஒற்றுமைகளை வைத்து ஆரியப்படையெடுப்பை நிரூபிக்க முடியாது என் என்றால் இந்த தொடர்பு Pleistocene காலத்திற்கு உரியது இந்த தொடர்பை எத்தியோப்பியா விலும் (ஆபிரிக்கா கண்டத்திலும்) அண்மையில் அவதானிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
அதே போல் இந்தியர்களின் Y-chromosome ஆராச்சியில் R1a1-M17 வகை ஆசிய ஜரோப்பிய கண்டங்களில் பூகோளரிதியில் விளங்கப்படுத்த முடியாத முறையில் பரவியிருப்பதால் அந்த வகையின் (மூலம்) பூர்வீகத்தை உறுதி செய்ய முடியாமல் உள்ளது என்கிறார்கள். ஆனால் J2A வகை பரவலில் ஒரு படையெடுப்புக்கான அறிகுறிகள் இருந்தாலும் அதன் அடிப்படையில் படையெடுப்பை உறுதிப்படுத்த முடியாது என்கிறார்கள். பிறகு J2A பரவலுக்கு Pleistocene கால ஆதிமனிதர் ஒற்றுமை காரணம் என்கிறார்கள். :?
ஆனால் 2 இனங்களுக்கும் (western Eurasia - Indo-Aryan/பார்பனர்கள் ) இடையிலான சிறிதளவு Caucasoid-specific mtDNA ஒற்றுமைகளிற்கு கிட்டடியில் (1.6million வருடங்களோடு ஒப்பிடும் போது) நடந்த கலப்பு காரணம் என்கிறார்கள். இதைப்பற்றி மேலதிகமாக இன்னமும் ஆராயப்படவில்லை. :roll:
அதே போல் இந்தியர்களின் Y-chromosome ஆராச்சியில் J2a-M410 தனியே பார்பான்களில் மாத்திரம் தான் காணப்படுகிறது என்கிறார்கள். இதைப்பற்றிய மேலதிக விளக்கங்கள் தரப்படவில்லை. :oops:
இங்கே மரபணு ஆராச்சி தகவல்கள் வெளியிடப்பட்டதும் விளக்கப்பட்டது பார்ப்பனர்கள் வந்தேறு குடிகள் அல்ல என்று கோணத்திலிருந்து போல்தான் எனது சிற்றறிவிற்கு தெரிகிறது.
அதாவது மொழி கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் ஆகழ்வாராச்சிகளால் என்பவற்றால் பூர்வீகர்கள் யார் என்று நியாயப்படுத்தப்பட்ட ஒன்றை பிழை என்று நிரூபிக்க முயற்சிக்கிறார்களே தவிர மரபணு ஆராச்சி மூலம் western Eurasia - Indo-Aryan இடையிலான தொடர்பை (விசேட ஒற்றுமைகளை) அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. ஆராச்சியின் நேக்கம் என்ன? அதில் ஈடுபடுபவர்கள் என்னத்தை அறிய முயற்சிக்கிறார்கள் எந்த முடிச்சை அவிளக்க விரும்புகிறார்கள் எந்த முடிச்சை மேலும் இறுக்கிக் கொள்ள விரும்புகிறார்கள் என்றதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்தளவு தான் இந்தக் கருத்துக் குழந்தைக்கு விளங்கியிருக்கு. குருவி அண்ண நீங்கள் உங்கள் விளக்கத்தையும் எழுதுங்கள். ராஜாதிராஜா கூறியது போல் மரபணு ஆராச்சி மூலம் பார்பனர்கள் வந்தேறு குடிகள் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு <b>விட்டதா</b> என்று அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 