01-19-2006, 01:57 PM
<b>மட்டு. தாண்டவன்வெளியில் தாக்குதல் - 3 காவல்துறையினர் பலி - 13 காவல்துறையினர் உட்பட 20 படையினர் படுகாயம் </b>
மட்டக்களப்பு மாவட்டம், தாண்டவன்வெளிச் சந்தியில் இன்று மாலை 5.00 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டதுடன், 13 காவல்துறையினர் உட்பட 20 படையினர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது ஒரு பொதுமகன் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரை இலக்கு வைத்து சைற் சாஜர் குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டதுடன் 13 காவல்துறையினர், மற்றும் ஏழு இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.
னஇதன்போது பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டும் மேலும் மூன்று பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலதிக படையினர் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்படுவதுடன், மக்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான படங்கள் விரைவில்...
<b><i>தகவல் மூலம்- சங்கதி</i></b>

"
"
"