01-19-2006, 01:14 PM
திமுகவுடன் தொடர்பு இல்லை: எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன் நடிகர் விஜய் பேட்டி
அண்மையில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஏற்பாடு செய்த விழாவில் விஜய் கலந்துகொண்டார். மேலும் தயாநிதி மாறன் - விஜய் உரையாடும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இதையடுத்து விஜய் திமுகவில் சேரப்போவதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து விஜய் கூறியதாவது:
என் அப்பா திமுக தலைவர் கருணாநிதி வசனத்தில் 4 படங்கள் தயாரித்து இயக்கி இருக்கிறார். ஆனாலும் அவர் அந்த கட்சியைச் சார்ந்தவர் அல்ல. திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. ஆனால் அந்த கட்சிக்கும் எனக்கும் என்த சம்பந்தமோ உறவோ கிடையாது.
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனோடு கலந்து கொண்ட டி.வி. நிகழ்ச்சி தற்செயலானது. அன்று மாலை நடக்க இருந்த தபால் வெளியீட்டு விழாவுக்காக காலையிலேயே நான் தில்லி சென்றுவிட்டேன்.
ஓய்வாக இருந்தபோது நானும் அவரும் தற்செயலாகச் சந்தித்து கொண்டோம். அப்போது இருவரும் உரையாடிய நிகழ்ச்சிதான் டி.வி.யில் ஒளிப்பரப்பானது. இதற்கு அரசியல் சாயம் பூசுவது நியாயம் அல்ல. சரியானதும் அல்ல.
இன்று மட்டுமல்ல என்றுமே எனக்கும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு அரசியலில் ஆனா ஆவன்னா கூட தெரியாது. நான் எந்தக் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றார்.
dinamani