01-19-2006, 12:58 PM
rajathiraja Wrote:ஐயா நாரதரே நானும் அதை தானே சொன்னேன் !! ஆரியர் ,என்று அழைக்கபடும் பிராமணியரும் பூரவகுடி என அழைக்க படும் திராவிடர் என்ற கருத்து தவறு என்று நீருபிக்க பட்டுள்ளது. இது என் வாதம்.
ராஜாதிராஜா நீங்கள் இணைத்த கட்டுரைகளை நான் இன்னும் முழுமயாக வாசிக்கவில்லை அதற்கு எனக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை.ஆனால் எனக்குத்தெரிந்த சில மரபணுரீதியான அடிப்படைகளைக் கூறுகிறேன்.மரபணுவியல் ரீதியான ஆய்வுகள் இப்போது தான் நடை பெறத்து துவங்கி உள்ளன,இவற்றில் எடுக்கப்படும் மாதிரிகள் எவ்வளவு பரந்து பட்டவை என்பதுவும் அஐய்வுக் குள்ளான மரபணுக்கள் அவை மருவிய விதம் மற்றும் குட்டிப் பரம்பல் மற்றைய எதிர்வு கூறல் என்பவற்றில் பல கேள்விகள் இருக்கின்றன.
ஆரியர்,திராவிடர் என்பது மரபணு ரீதியாக வெவ்வேறு பரிணாம நிலக்களுக்குள் இருக்கும் மனிதர் பற்றியது.ஆகவே அவசரமாக அரசியல் காரணங்களுக்காக இந்தக் கட்டுரை இங்கே இணைக்கப் பட்டுள்ளது.ஆகவே விவாதம் இன்னும் முடிந்து விடவில்லை. நேரம் எடுத்து இதற்கு ஆறுதலாகப் பதில் அழிக்கிறேன்.

