01-19-2006, 04:35 AM
<b>காளிகோயிலுக்கு சென்ற எனது மகனை சடலமாகவே காண முடிந்தது: மாணவர் படுகொலை விசாரணையில் சஜிந்திரனின் தந்தை </b>
காளிகோயிலுக்கு சென்று வருவதாக கூறியே எனது மகன் போனார். பின்னர் அவரைப் பிணமாகவே மீட்க முடிந்தது. இவ்வாறு திருமலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான சஜீந்திரனின் தந்தை சண்முகராசா தெரிவித்தார். இந்தப் படுகொலை தொடர்பான மரண விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
எனது மூன்று மகன்களில் ஒருவர் சஜீந்திரன். சம்பவ நாளன்று மாலை 6 மணிக்கு காளி கோயிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார். அந்தக் கோயில் சிறி கோணேஸ்வரா இந்து கல்லூரிக்கு அருகாமையில் உள்ளது. அதன் பின்னர் கடற்கரைப் பகுதியில் குண்டுவெடித்ததாக தகவல் கிடைத்தது.
வித்தியாலயம் வீதியூடாக அங்கு சென்று பார்த்தேன். அதன் பின்னர் எனது மகன் வீடு திரும்பாததால் திருகோணமலை அரசமருத்து வமனைக்குச் சென்று பார்த்தேன். எனது மகனின் சடலம் அங்கே இருந்தது. சம்பவ இடத்தில் இருந்த அரச படையினருக்கு எனது மகனின் மரணம் குறித்து தெரியும். எனது மகன் துப்பாக்கிச் சூட்டினால்தான் படுகொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனது மகனுக்கு அரசியலில் எதுவித தொடர்பும் இல்லை. எதிரியும் இல்லை. கட்டுமானப் பொறியியல் படிப்புக்கு தேர்வாகியிருந்தார் என் மகன். சாலி கிராமத்தில் கணணி கற்பிக்கும் ஆசிரியராக இடைக்காலத்தில் அவன் பணியாற்றி வந்தான் என்றார்.
றொகன்த் என்ற மாணவரின் தாயார் திருமதி லோகிதாசன் லோகநாயகி சாட்சியம் அளிக்கையில்:
சம்பவத்தில் என் மூத்த மகன் கொல்லப்பட்டான். சம்பவம் நடந்த நாளன்று காளி கோயிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு என் மகன் சென்றான். ஆனால் இரவு 9 மணி வரை அவன் வீடு திரும்பவில்லை. அவனது கையடக்க தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் பதிலேதும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் மாணவர்கள் சிலரை இராணுவம் கைது செய்திருப்பதாக தகவல் கிடைத்தது.
அதனால் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். அங்கிருந்த பொலிசார் எனது மகனின் பெயரும் இறந்தவர்கள் பட்டியலில் இருப்பதாகக் கூறினார். அதன் பின்னர் அடுத்த நாள் பிணவறையில்தான் என் மகனின் சடலத்தைப் பார்த்தேன். சம்பவ இடத்திலிருந்த இராணுவத்தினருக்குத்தான் என் மகன் எப்படி இறந்தான் என்பது தெரியும். என் மகன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டான் என்பதை மருத்துவ அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அறிந்துகொண்டேன் என்றார்.
இந்த விசாரணையின் போது, சாட்சியம் அளிக்க விரும்புவோர் இரகசியமாக சாட்சியமளிக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
திருகோணமலை மூத்த சட்டத்தரணி ஏ. ஜெகசோதி, சிறிலங்கா பிரதி சட்ட மா அதிபர் டி. லிவெர மற்றும் இரண்டு அரசத் தரப்பு சட்டத்தரணிகளும் இந்த விசாரணையின் போது உடனிருந்தனர்.
கடந்த 10 ஆம் திகதி இந்த விசாரணை தொடங்கியது. அதன் பின்னர் 12ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மாணவர்கள் படுகொலையைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம் நடந்தமையால் இந்த விசாரணை 16 ஆம் திகதி நடைபெற்றது.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு</b></i>[/b]

"
"
"