01-19-2006, 03:29 AM
<span style='font-size:25pt;line-height:100%'><b>தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான சித்திரவதை: பாதுகாப்பு அமைச்சிடம் முறைப்பாடு </b>
தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான சித்திரவதையைக் கண்டித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு பல ஊடக அமைப்புகளின் சார்பாக முறைப்பாட்டுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
<b><i>இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.பாரதி, இலங்கை ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் பாலசூர்யா, இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் என்.எம். அமீம், சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீதா ரஞ்சனி, ஊடகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் தர்மசிறி லங்கபெலி ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.</i></b>
தமிழ் ஊடக நிறுவனங்களில் தேடுதலை மேற்கொள்ளவும் தமிழ் ஊடகவியலாளர்களைக் கைது செய்யவும் அவசரகால சட்ட நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் தகவல் அமைச்சினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளும் கூட இத்தகைய கைது நடவடிக்கைகளின் போது நிராகரிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையானது ஊடகவியலாளர்களின் பணிச் சூழலை மட்டும் பாதிக்கவில்லை. அவர்கள் தங்கள் வதிவிடங்களில் வாழ்வதற்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தங்களுடன் விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 15 ஆம் நாள் யாழில் நமது ஈழநாடு அலுவலகத்தில் சோதனை
டிசம்பர் 17 ஆம் நாள் கொழும்பு தினக்குரல் ஊடகவியலாளர் 12 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டமை
டிசம்பர் 19 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் அமைதி ஊர்வலத்தில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களை அரச படையினர் தாக்கியமை
ஜனவரி 5 ஆம் நாளன்று புகைப்படம் எடுத்த வீரகேசரி மற்றும் தினக்குரல் ஊடகவியலாளர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன.
இதனிடையே ஊடகத்துறையினர் மீதான ஒடுக்குமுறைகளைக் கண்டித்து கண்டியில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளர் சுனந்த தேசப்ரிய மற்றும் ஊடகவியலாளர் இயக்கங்களின் நிர்வாகிகள் சனத் பாலசூர்ய, பொட்டல ஜயந்த, கசுன் யாப்ப கருணாரட்ண, தர்மசிறி லங்கஜெலி உள்ளிட்ட பலர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
கண்டி மற்றும் நுவரெலியா ஊடகவியலாளர் சங்கங்களும் இந்தப் பேரணியில் இணைந்து கொண்டனர்.
சுயாதீனமாகச் செயற்படும் ஊடகவியலாளர்கள் மீதான காவல்துறையினரது ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாகைகளும் இந்தப் பேரணியில் ஏந்திச் செல்லப்பட்டன</span>
<b><i>தகவல்மூலம்;- புதினம்</i></b>

"
"
"