Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முடியுநட்புடன் பழகுவது ஆபத்தில் ம்: நடிகை சினேகா
#1
<img src='http://img468.imageshack.us/img468/6321/goldentamiljana30mv.jpg' border='0' alt='user posted image'>




முடியுநட்புடன் பழகுவது ஆபத்தில் ம்: நடிகை சினேகா சொல்கிறார்
நடிகை சினேகா நடந்த சம்பவங்களை மறந்து இப்போதுதான் மாமூல் நிலைக்கு திரும்பியிருக்கிறார். பத்திரிகையாளர்கள் என்றாலே நாகாரவியைப் பற்றி கேட்டு விடுவார்களோ என்று ஒதுங்கி ஓடிய சினேகா இப்போது மனம் விட்டுப் பேசுகிறார்.

நான் சினிமாவில் நடிக்க ஒப்புக்கொண்ட போது இப்படியெல்லாம் பிரச்சினைகள் வரும் என்று நினைக்கவில்லை. இரண்டு மூன்று மாதங்களாக மிகவும் வேதனையை அனுபவித்து விட்டேன். காதல், கல்யாணம், என்றார்கள். நாகாரவியிடம் நான் நட்புடன்தான் பழகினேன். அதிலும் ஆபத்து உண்டு என்பதை தெரிந்து கொண்டேன்.

நண்பர்களிடமும் உஷாராக இருக்க வேண்டும் என்பதை நடந்த சம்பங்கள் மூலம் பாடமாக கற்றுக் கொண்டேன். நல்லவேளை அதில் இருந்து எப்படியோ மீண்டு வந்து விட்டேன். இந்த புத்தாண்டு பழையவற்றை மறந்து மகிழ்ச்சியுடன் வாழும் நல்ல ஆண்டாக அமையும் என்று நம்புகிறேன்.

மும்பையில் பிறந்து, துபாயில் வளர்ந்த நான், அங்கு நடந்த சினிமா நட்சத்திர கலை நிகழ்ச்சியை பார்க்க சென்றேன். அப்போது என்னை பார்த்த மலையாள டைரக்டர் பாசில் சினிமாவில் நடிக்க அழைத்தார். எனது முதல் படம் மலையாளம். எதிர்பார்த்த அளவு அந்த படம் வெற்றி பெறவில்லை. அடுத்து நடித்த தமிழ் படமும் `ரிலீஸ்' ஆகவில்லை. படஉலகில் இருந்து விலகி படிக்கலாமா என்று யோசித்த போது ஆர்.பி. சவுத்ரி தயாரித்த `ஆனந்தம்' படத்தில் நடித்தேன். அதில் நல்ல பெயர் கிடைத்தது.

தற்போது தெலுங்கில் `ஸ்ரீíராமதாஸ்', `ஏமண்டி சீவாரு' என்ற படங்களிலும், தமிழிலில் செல்வராகவன் இயக்கத்தில் `புதுப்பேட்டை'யிலும், மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்திலும் நடிக்கிறேன். இது எனது 32-வது படம்.

`புதுப்பேட்டை' படத்தில் விலைமாதுவாக நடிக்கிறேன். இது ஒரு விலைமாது அனுபவிக்கும் மன வேதனைகளையும், குடும்ப கஷ்டங்களையும் பிரதி பலிக்கும் வேடம். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இது போன்ற பாத்திரம் கிடைத்தால் தெலுங்கிலும் நடிக்க தயார்.

நான் `கமர்சியல்' படங்களிலும் நடிக்கிறேன். என்றாலும், குறிப்பிட்ட எல்லையை தாண்டி என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

ஒரு பிரபல டைரக்டர் என்னை கவர்ச்சி வேடத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. கதை எனக்குப் பிடித்தால்தான் நான் நடிப்பேன்.

தமிழில் `ஏபிசிடி'யில் நடித்த விதவைப் பெண் வேடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. `ஆனந்தம், `பார்த்திபன் கனவு' படங்கள் பிடித்தவை. அடுத்து பிடித்த வேடம் `புதுப்பேட்டை'யில் நான் நடிப்பதுதான். தெலுங்கில் ஸ்ரீராமதாஸ் படத்தில் நடிக்கும் வேடம் பிடித்திருக்கிறது. இது தெலுங்கு பட உலகில் எனக்கு ஒரு மைல் கல்லாக அமையும்.

காதல் கதைகளில் நடிக்க மிகவும் பிடிக்கும். `மரோசரித்ரா' போன்ற காதல் படங்களில் நடிக்க ஆசை. படங்களில் டைரக்டர் சொல்வதை செய்கிறேன். எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

சமீபத்தில் ஒரு விழாவில் நடிகர் சிரஞ்சீவி என்னை மற்றொரு சவுந்தர்யா என்று பாராட்டினார். இதை என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன்.

என்னை தமிழ் பெண் என்று கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. எனது மூதாதையர்கள் ஆந்தி ராவை சேர்ந்தவர்கள். எனது தாய்மொழி தெலுங்குதான். தெலுங்கு பட உலகில் நிலையான இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அது நிச்சயம் நிறைவேறும் என்பது லட்சியம் என்றார் சினேகா.
maalaimalar.com

Reply


Messages In This Thread
முடியுநட்புடன் பழகுவது ஆபத்தில் ம்: நடிகை சினேகா - by கீதா - 01-18-2006, 10:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)