Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈராக்கில் அமெரிக்க உலங்குவானூர்தி...
#31
ஈராக் போரின் உண்மைகள் என்ற தலைப்பில் அண்மையில் ஐரீவியில் நேற்று முன்தினம் இரவு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. அமரிக்கா எப்படி ஈராக்கை கைப்பற்றியது என்பதை வலு விலாவாரியாக விழக்கியபோது உண்மையில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அமரிக்க தருப்புகள் ஈராக்கை முற்றுகையிட முன்னரே சீஐஏயின் உளவாளிகள் (இவர்கள் ஈராக்கியர்கள்) ஏராளமான பணத்துடன் செய்மதி தொலைபேசியுடன் ஈராக்குக்கு அனுப்பப்பட்டார்கள். இவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான் ஈராக் படையில் உள்ள தலைமை அதிகாரிகளை விலைக்கு வாங்குவது. இதற்காக அவர்கள் பேரம் பேசலை நடாத்தியதுடன், 5, 10, 15, 20, 25 ஆயிரம் டொலர்களை அள்ளி வீசியும் உள்ளனர். வாங்கப்பட்ட இராணுவ மற்றும் வான்படை தளபதிகள் இந்த உளவாளிகள் ஊடாக அமரிக்கர்களுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். தமது படையின் கன ரக ஆயுதங்கள் டாங்கிகள், மற்றும் நவீன விமானங்கள் பாவிக்கப்படுவதை தடுப்பது. அப்பாவிப் படையினரின் நகர்வுகளை அமரிக்க வான்படைக்கு தெரியப்படுத்துவது. முக்கியமாக சதாமின் நம்பிக்கைகுரிய படைகளின் நகர்வையும் தளங்களையும் தெரியப்படுத்தவது. சதாமின் இருப்பிடத்தை தெரியப்படுத்துவது. சதாம் பற்றிய முதலாவது தகவலை கொடுத்தது சதாமின் உளவுத்துறைக்கு பொறுப்hன மிக முக்கிய நபர். அனால் முதல் நாள நடை பெற்ற தாக்குதலில் சதாம் தப்பி விட்டார். காரணம் சதாமின் இறுதி நேர மன மாற்றம். தாக்குதல் நடை பெற தொடங்கியதும், வான் படை தளபதி ஒருவர் நவீன ரக விமானங்கள் அனைத்தையும் பலைவனம் ஒன்றில் ஒளித்து வைத்து விட்டு விமானப்படை விருர்களை வேறு பணிக்கு அனுப்பி விட்டார்கள். இந்த விமானங்கள் அனைத்தும் தற்போது அவுஸ்திரேலிய படைகளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படி தாக்கப்படவில்லை. இந்த விமானங்களை தொலைக்காட்சியில் பார்த்த போது அதன் தரம், மிக மிக அருமையாக இருக்கிறது. இவை பாவிக்கப்பட்டிருந்தால் அமரிக்க படைகள் மிக மோசமான அழிவுகளை எதிர்கொண்டிருக்கும். ஈராக்கின் இந்த விமானப்படையை அமுக்கிய அந்த தளபதி தற்போது அமரிக்காவில் மிக பாதுகாப்புடன் உல்லாசமாக இருக்கிறார். அமரிக்க படைகள் பக்தாத் விமான நிலையத்தை கைப்பற்றிய அடுத்த கணம் அங்கிருந்து புறப்பட்ட விமானத்தில் இந்த தளபதியும் ஏனைய இருவர் அல்லது மூன்று முக்கிய புள்ளிகள் ஈராக்கிலிருந்து அமரிக்காவுக்கு பாதுகாப்பாக எடுத்தச் செல்லப்பட்டனர்.

இது விமானப்படைக்கு நடந்தது. ஈராக்கின் ஆட்லறி மற்றும் டாங்கி படையணிக்கு நடந்ததது அதை விட மோசமானது. யுத்தம் ஆரம்பித்த முதலாவது நாள் ரஸ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், அமரிக்கா அகிய நாடுகளில் முன்பு கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து டாங்கிகள், ஆடலறிகளில் போன்ற கனரக ஆயுதங்களில் தரமானவற்றை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல கட்டளையிடப்பட்டது. தரம் குறைந்தவற்றை மட்டும் எடுத்த படி கால் நடையாகவோ அல்லது பஸ்கள் லொறிகளிலோ உடனடியாக பக்தாத் நோக்கி நகரும் படி சதாமின் முக்கிய படையணிகளுக்கு கட்டளை பறந்தது. இரவில் இல்லை பட்டப்பகலில் இந்த நகர்வை மேற்கொள்ள கட்டளையிட்டனர். அப்பாவிப் படையினர் ஈராக்கின் பல பகுதிகளில் இருந்து மிக அவரசம் அவசரமாக குளப்பத்துடன் பாரிய நகர்வுகளை பக்தாத் நோக்கி நடாத்த, அமரிக்காவால் விலைக்கு வாங்கப்பட்ட இரண்டு முக்கிய தலைகள் இந்த நகர்வுகள் பற்றிய அனைத்து தகவலையும் அமரிக்க விமானப்படைக்கு தம் வசம் வைத்திருந்த செய்மதி தெலைபேசியுூடக அறிவித்தனர். அமரிக்க விமானங்கள் இந்த இலக்குகளை குறிதவறாது அழித்து துவசம் செய்தனர். அமரிக்காவின் அகோர குண்டு தாக்குதலில் அனைவரும் மண்ணில் புதையுண்டு போயினர். இநடத இடங்களை தொலைக்காடசியல் பார்த்தபோது உண்மையில் மலைப்பாக இருந்தது.

இதில் இன்னுமொரு வியப்பான விடயம் யுத்த காலத்தில் அமரிக்க தளபதிகள் தினமும் நடாத்தும் பத்திரிகையாளர் மகாநாடு. ஈராக்கின் விமானப்படை மற்றாக அழிக்கப்பட்டதாக அவர்கள் காட்டிய படங்கள் உண்மையில் பழைய விமானங்கள். இரண்டாம் உலக யத்த கால விமானங்கள். இது இரு தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட விமானங்களே. அழிக்கப்பட்டதாக காட்டப்பட்ட டாங்கிகள், திருத்த முடியாத நிலையில் கைவிடப்பட்டவையே.

சதாம் பற்றிய தகவல்களை இந்த தளபதிகள் முதல் நாள் கொடுத்ததை அடுத்து சதாம் தனக்கு வேண்டிய மிக மிக நம்பிக்கையான நாலுபேரை மட்டும் ஒரு கபேக்கு சதாம் இரகசியமாக கூடிப்பேச சதாம் அழைப்பு விட்டார். ஆனால் அந்த கூட்டத்திற்கு மூன்று பேர் மட்டுமே வந்திருந்ததை அடுத்து சதாம் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார். சில நிமிட நேரத்தில் அந்த கபே அமரிக்க படைகளால் பாரி குண்டு தாக்குதலுக்கு உள்ளானது. அதன் பின் நடந்தது நாம் அறிந்ததே, அனால் அன்று தான் சாதாமும் யார் துரோகி என்பதை அறிந்து கொண்டார். அதன் பின் மாறு வேடத்தில் சதாம் கால் நடையாகவே வட ஈராக்கை நோக்கி நகர்ந்தார். இந்த தகவலை சதாமின் மிக முக்கி பாதுகாப்பளரான அவரது மைத்துனரே தெரிவித்தார். சதாம் தெருக்களில் மக்களை சந்தித்தபோது உறுதுணையாக நின்ற இந்த பாதுகாவலர் பின்னர் அமரிக்க படைகளால் கைது செய்ப்பட்டார். அவரின் தகவலின் படி அமரிக்க படைகள் பக்தாத்த நகரை முற்றுகையிடுகையில் ஒரு தடைவை சதாம் ஒரு பள்ளிவாசலில் இரந்த போது அமரிக்க படையினர் வெளியில் நின்றிரக்கிறார்கள். ஆனால் அமரிக்க படையினருக்க இது தெரியாத படியினால் அன்று சதாம் தப்பித்து விட்டார். அனால் பின்னர் பாவம் ஓடிக்களைத்த சதாம் தனது சொந்தக்காரர் ஒருவராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார்.
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 10-27-2003, 11:17 PM
[No subject] - by Mathivathanan - 10-28-2003, 08:37 AM
[No subject] - by yarl - 10-28-2003, 08:59 AM
[No subject] - by Paranee - 10-28-2003, 09:25 AM
[No subject] - by Mathivathanan - 10-28-2003, 10:09 AM
[No subject] - by Kanani - 10-28-2003, 11:53 AM
[No subject] - by kuruvikal - 10-28-2003, 12:35 PM
[No subject] - by Paranee - 10-30-2003, 05:07 AM
[No subject] - by Mathivathanan - 10-30-2003, 07:58 AM
[No subject] - by Mathivathanan - 10-30-2003, 08:17 AM
[No subject] - by Mathivathanan - 10-30-2003, 08:26 AM
[No subject] - by kuruvikal - 10-30-2003, 01:03 PM
[No subject] - by சாமி - 10-30-2003, 04:35 PM
[No subject] - by Mathivathanan - 10-31-2003, 08:43 PM
[No subject] - by kuruvikal - 11-02-2003, 10:25 AM
[No subject] - by தணிக்கை - 11-02-2003, 11:00 AM
[No subject] - by vasisutha - 11-03-2003, 07:15 AM
[No subject] - by Paranee - 11-03-2003, 01:17 PM
[No subject] - by kuruvikal - 11-08-2003, 08:46 AM
[No subject] - by kuruvikal - 11-08-2003, 08:57 AM
[No subject] - by Mathivathanan - 11-08-2003, 01:43 PM
[No subject] - by kuruvikal - 11-12-2003, 04:45 PM
[No subject] - by yarlmohan - 11-14-2003, 04:44 PM
[No subject] - by kuruvikal - 11-14-2003, 07:40 PM
[No subject] - by kuruvikal - 11-15-2003, 08:43 PM
[No subject] - by Mathivathanan - 11-15-2003, 10:44 PM
[No subject] - by தணிக்கை - 11-16-2003, 04:05 PM
[No subject] - by kuruvikal - 11-16-2003, 07:37 PM
[No subject] - by kuruvikal - 01-08-2004, 03:50 PM
[No subject] - by mohamed - 01-13-2004, 12:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)