Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நோர்வே தூதுவர் ஊடாக அரசு புலிகளுக்கு விசேட தகவல்
#2
<b>நேர்வேயில் பேச்சுக்களை நடத்த ஹான்ஸ் பிரஸ்கர் ஊடாக விடுதலைப் புலிகளுக்கு தகவல் </b>

சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான பேச்சுக்களை நோர்வேயில் நடத்த மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நோர்வேயில் பேச்சுக்களை முன்னெடுக்கும் இடம் குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கூடாக ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச விடேச தகவல் ஒன்றை நேற்று அனுப்பியிருந்தார் என தெரியவருகிறது.

குறித்த தகவலை இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹென்ஸ் பிரஸ்கர் புலிகளுக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதியை பொறுத்தவரையில் சமரச பேச்சுவார்த்தையை ஐரோப்பிய நாடு ஒன்றில் அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நோர்வே நாட்டில் நடத்த விருப்பம் கொண்டுள்ளார். அதனை நோர்வே தூதுவர் ஊடாக புலிகளுக்கு தெரிவித்துள்ளார் என அமைச்சரவை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கில் அதிகரித்துவரும் வன்முறைகளை உடன் நிறுத்த விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக் மகிந்த ராஜபக்ச முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

<b><i>தகவல் மூலம்- பதிவு</i></b>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 03:00 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)