Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செல்ஹெய்ம் பிரபா சந்திப்பு பாலா வந்தால் மட்டுமே சாத்தியம்
#3
<b>எரிக் சொல்ஹெய்ம், பாலசிங்கத்தை தடுத்து நிறுத்துக: மகிந்தவுக்கு ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை!</b>

இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் ஆகியோர் இலங்கைக்கு வருவதைத் தடுத்த நிறுத்த வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வேண்டுகோள் விடுத்துள்ளது.


கொழும்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியதாவது:

கடந்த கால அரசாங்கங்களைப் போலவே மகிந்த அரசாங்கமும் அமைதி முயற்சி என்ற பெயரால் சிறிலங்காவின் இறையாண்மையை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறார்கள்.

எரிக் சொல்ஹெய்ம் மற்றும் பாலசிங்கம் ஆகியோர் இலங்கைக்குள் நுழைய அனுமதி கொடுத்தவர்கள் யார் என்பதை அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும்.

விடுதலைப் புலிகளின் மீது ஐரோப்பிய ஒன்றியம் பயணத் தடை விதித்துள்ளது. ஆனால் சிறிலங்கா அரசாங்கமானது எதுவித தடையும் கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. இலங்கைக்குள் பாலசிங்கம் நுழைவதை மகிந்த ராஜபக்ச தடுக்க வேண்டும்.

சில உறுதிமொழிகளின் அடிப்படையில்தான் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவை நாம் ஆதரித்தோம். ஜாதிக ஹெல உறுமயவுக்கு அளித்த வாக்குறுதிகளை மகிந்த ராஜபக்ச காப்பாற்ற வேண்டும்.

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் தமிழ் உறுப்பினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை சபாநாயகர் லொக்கு பண்டாராவினால் தடுக்க முடியவில்லை. அதனால் அவர் உடனே பதவி விலக வேண்டும். எரிக் சொல்ஹெய்ம் மற்றும் பாலசிங்கத்தின் வருகை குறித்து கேள்வி எழுப்பிய போது தமிழ் உறுப்பினர்கள் இடையூறு செய்தனர்.

நாடாளுமன்றச் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் தமிழ் உறுப்பினர்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அத்துரலிய ரத்ன தேரர்.

<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 06:42 AM
[No subject] - by மேகநாதன் - 01-18-2006, 02:48 PM
[No subject] - by மேகநாதன் - 01-19-2006, 01:37 PM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 08:19 AM
[No subject] - by மேகநாதன் - 01-20-2006, 08:51 AM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:21 PM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:22 PM
[No subject] - by மேகநாதன் - 01-21-2006, 06:22 PM
[No subject] - by மேகநாதன் - 01-22-2006, 06:44 AM
[No subject] - by மேகநாதன் - 01-23-2006, 05:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)