01-18-2006, 05:45 AM
<b>சுனாமியில் கணவனை இழந்தவர் குழந்தைகளுடன் அகதியாக வந்தார் </b>
<img src='http://dinamalar.com/2006jan18/photos/IMP37.jpg' border='0' alt='user posted image'>
ராமேஸ்வரம்: சுனாமியில் கணவனை இழந்த பெண், 3 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். ஐந்து நாட்களில் அகதிகளின் வருகை 53 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கை ராணுவத்திற்கும் புலிகள் அமைப்பிற்கும் உள்நாட்டு சண்டை நடப்பதால் அகதிகள் தமிழகம் வருவது அதிகரித்துள்ளது. ஜன.12ம் தேதி 24 பேர், 13ல் 9 பேர், 14ல் 5 பேர், 15ல் 10 பேர், என 48 பேர் வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை பேசாளையிலிருந்து சுனாமியின் போது கணவரை இழந்த கல்யாணி(29) குழந்தைகள் விஷாந்தினி(7), கிஷன்(5), சசுஷியா(2) உட்பட 4 பேர் தங்கச்சிமடத்திற்கு படகில் வந்தனர்.மேலும் மன்னார் முல்லைத்தீவை சேர்ந்த வின்ஸ்டன்(50) என்பவர் தனியாக தனுஷ்கோடி வந்தார். இவர்களை சேர்த்து அகதிகளின் வருகை ஐந்து நாட்களில் 53 ஆக உயர்ந்துள்ளது.நேற்று வந்த 5 பேரும் போலீசாரின் விசாரணைக்கு பின் மண்டபம் முகாம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கல்யாணி கூறியதாவது: இலங்கை ராணுவத்தின் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தமிழர்கள் நிம்மதி இழந்துள்ளனர். என் கணவர் கண்ணன் சுனாமியில் இறந்து விட்டார்.குழந்தைகளுடன் கஷ்டமான நிலையில் குடும்பத்தை நடத்தி வருகிறேன். புதுச்சேரியில் என் தந்தை உள்ளார். அங்கு செல்ல படகில் ரூ.2ஆயிரத்து 500 கொடுத்து தங்கச்சிமடம் வந்தேன். வழிதெரியாமல் அங்கிருந்து முகுந்தராயர்சத்திரம் சென்று பின்னர் தனுஷ்கோடி வந்தடைந்தேன். இவ்வாறு கூறினார்.
Source : dinamalar.com
http://dinamalar.com/2006jan18/imp37.asp

.
.
.