06-23-2003, 11:13 AM
23-ஜுன் உதயனிலிருந்து...........
கிளிநொச்சி நீதிமன்றில் வினோதமான வழக்கு
தனது குழந்தையை பிறந்த அன்றே வேறொரு தம்பதியினரிடம் கொடுத்த தாய் ஒருவர், நான்கு வருடங்களுக்குப் பின்னர் தனது குழந்தையை மீண்டும் தன்னிடம் பெற்றுத்தரு மாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் இந்த விநோதமான வழக்கு நடைபெற்றுள்ளது.
இந்த வழக்கை விரிவாக விசாரணை செய்த கிளிநொச்சி மாவட்ட நீதியாளர் செந்து}ர் சம்பந்தப்பட்ட குழந்தையின் விருப்பப்படி அதனை வளர்ப்புத் தாயுடன் இருப்பதற்கு அனுமதி வழங்கினார்.இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
காதல் உறவு காரணமாகப் பிறந்த குழந்தையை குறித்த யுவதி, ஊர்மக்களின் ஏளனத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் வகையில் அன்றைய தினமே ஏற்கனவே நீண்ட காலமாக குழந்தைகள் இன்றி இருந்த தம்பதியினருக்கு கொடுத்திருந்தார்.மேற்படி பெண்ணின் காதலனின் அச்சுறுத்தலினாலேயே அவர் தனது குழந்தையை வேறொரு தம்பதியினரிடம் ஒப்படைத்தார் என்று கூறப்பட்டது.
இச்சம்பவம் நடைபெற்று நான்கு வருடங்களுக்குப் பின்னரும் தனது காதலன் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்புத் தெரிவித்ததால் மேற்படி பெண் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
தனது வழக்கு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அந்தப் பெண் தனது காதலனுக்கும் தனக்கும் இடையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட உறவினால் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது எனவும் -
அதனை வேறொரு தம்பதியினரிடம் ஒப்படைத்ததாகவும் நீதியாளரிடம் கூறினார்.
தனது பிள்ளையை மீண்டும் தன்னிடம் சேர்ப்பிக்க உதவும்படியும் அப்பெண் நீதிமன்றில் கேட்டுக்கொண்டார்.இதனையடுத்து, சம்பந்தப் பட்ட குழந்தையையும், அக்குழந்தையின் வளர்ப்புத் தாயையும் மன்றுக்கு வரவழைத்த நீதியாளர் அவர்கள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையின் விருப்பத்தைக் கேட்டார். அந்தக் குழந்தை தனது வளர்ப்புத் தாயுடன் செல்வதற்கே விருப்பம் தெரிவித்தது.
இதனை அடுத்து நீதியாளர் தமது தீர்ப்பில்:-
தனது காதலனுடனான உறவில் பெற்ற குழந்தையை வேறொருவரிடம் கொடுத்துவிட்டு, தற்போது தனது காதலன் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக மேற்படி பெண், குழந்தைக்கு உரிமை கோரினாரே தவிர குழந்தை மீதுள்ள உண்மையான பாசத்தினால் அல்ல என்பதனாலும் -
குழந்தை தனது வளர்ப்புத் தாயுடன் இருக்கவே விரும்புவதனாலும் குழந்தை தொடர்ந்தும் வளர்ப்புத் தாயுடனேயே இருக்கவேண்டும் என்றும் - தெரிவித்தார்.
குழந்தையின் பெற்ற தாயை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவரது காதலனுக்கு நீதியாளர் உத்தரவு பிறப்பித்தார்.