Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழ நூலகம்
#1
யாழ் கள உறவுகளுக்கு
வணக்கம்

சிறிது காலம் முன்னே களத்தில் ஈழத்து நூல்களை இணையத்தில் அனைவரும் படிக்கும் வகையில் மின்வெளி நூலகம் ஒன்றை அமைக்கும் முயற்சி பற்றிக் குறிப்பிட்டு உதவி கேட்டிருந்தேன்.அந்த முயற்சி இப்போது கைகூடி வந்திருக்கிறது
www.noolaham.net

என்னும் முகவரியில் நீங்கள் அதனைப் பார்வையிடலாம்

எரித்தழிக்கப்பட்ட ஈழத்தமிழனின் சொத்து யாழ் நூலகத்தை நினைவுகூரும் வகையிலும் எங்களில் அரிய இலக்கியங்கள் தற்காலிகமாகவேனும் ஈழத்துக்கு வெளியே பாதுகாக்கப்படவேண்டியதன் தேவையை வலியுறுத்தியும் யாழ் நூலகத்தின் படம் நூலகத்தின் முகப்பிலே இடம்பெற்றிருக்கிறது


நூலகம் மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியது
1) ஈழத்து எழுத்தாஅர்களின் நூல்கள்(ஈழத்திலும் புலத்திலும் எழுதப்பட்டவை)
2) சஞ்சிகைகள்-இதுவரையும் வெளிவந்த வந்துகொண்டிருக்கும் சஞ்சிகைகள்
3) உதிரி ஆக்கங்கள்-கவிதை கட்டுரை விமர்சனம் என்று பல்வேறு பத்திரிகைகளிலும் வெளிவந்த உதிரி ஆக்கங்கள்

இதுதவிர விக்கிபீடியாவில் ஈழத்து இலக்கியக் கலைக்களஞ்சியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது பல்வேறு தலைப்புகளின் கீழ் தகவல்கள் பகுத்துத் தொகுக்கப்படுகின்றன

http://noolaham.net/wiki/doku.php?id=%E0%A...%AE%AF%E0%AE%BE
இன்னொரு முயற்சியாக நண்பர் ஒருவர் தமிழ் நூல்களுக்கான தரவுத்தளம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.உலகின் அனைத்துப் பாகங்களிலும் வெளியான தமிழ் நூல்கள் பற்றிய விபரங்களை நீங்கள் அங்கே பெற்றுக்கொள்ளலாம்.முடிந்தவரை ஈழத்து நூல்கள் பற்றிய தகவல்களை திரட்டி அத்தளத்தில் சேகரிப்பதில் முயன்றுகொண்டிருக்கிறோம்

http://www.viruba.com/

இம்முயற்சிகளை நீங்களும் பார்வையிட்டு உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதோடு அவற்றைப் பயன்படுத்தியும் இணைந்து செயற்பட்டும் உங்கள் ஆதரவைத் தெரிவிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்

இவை திறந்த நிலையில் யார் வேண்டுமானாலும் பங்கு கொள்ளக் கூடிய குழு முயற்சிகள் ஆகவே எவ்வகையான விமர்சனமாக இருந்தாலும் மகிழ்வுடன் எதிர்நோக்குகிறோம்

தள வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் தளத்தின் வடிவமைப்பு ஒழுங்கமைக்கப்படவில்லை விரைவில் சீர் செய்யப்படும்

நூலகம் தன்னார்வ நண்பர்கள் சார்பில்
ஈழநாதன்
\" \"
Reply


Messages In This Thread
ஈழ நூலகம் - by Eelavan - 01-17-2006, 03:56 PM
[No subject] - by இளைஞன் - 01-17-2006, 05:36 PM
[No subject] - by Rasikai - 01-17-2006, 06:26 PM
[No subject] - by stalin - 01-17-2006, 06:33 PM
[No subject] - by மேகநாதன் - 01-17-2006, 07:07 PM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 07:13 PM
[No subject] - by Snegethy - 01-17-2006, 07:18 PM
[No subject] - by Vasampu - 01-17-2006, 08:39 PM
[No subject] - by ஈழமகன் - 01-17-2006, 10:14 PM
[No subject] - by Vasampu - 01-17-2006, 10:22 PM
[No subject] - by ஈழமகன் - 01-17-2006, 10:37 PM
[No subject] - by Vasampu - 01-24-2006, 06:46 PM
[No subject] - by Eelavan - 01-25-2006, 11:33 AM
நூலகம் - by parisian - 02-13-2006, 10:26 AM
[No subject] - by RaMa - 02-15-2006, 08:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)