01-17-2006, 02:41 PM
தூயவன் Wrote:kuruvikal Wrote:Luckyluke Wrote:எனக்கு பரதம் பற்றி அவ்வளவாக தெரியாது... ஆனால் ஆருரான் சொல்வதைப் பார்த்தால் பரதம் தமிழனால் கண்டுபிடிக்கப் பட்டது என்றே தெரிகிறது.... அவர் அதற்கு ஆதாரமும் காட்டுகிறார்.... ஒத்துக் கொண்டு போக வேண்டியது தானே?
அதெப்படி ஒத்துக் கொள்வீர்கள்.. பாகிஸ்தான் கிஸ்துஸ்தானின் பகுதி..என்பது வரலாறு..அப்புறம் அரேபியர்களின் வருகையால் அது இந்தியாவை விட்டுப் பறிபோன பின்...அது ஜிஸ்துஸ்தான் என்று சொல்ல முடியுமோ...??!
அதுபோலத்தான் சதிர் தமிழர்களின் கூத்துக்களின் ஒன்று. அதைத் தமிழர்களே சீரழித்துவிட்டு... இப்போ அதே வடிவத்தில் ஆனால் வேற்றுமைகள் கொண்ட பரதநாட்டியத்தை தங்களது என்று சாதிக்க முடியுமோ..??!
இவ்வளவு வரைக்கும் ஒத்துக் கொண்ட உங்கள் மனதை பாராட்டத்தான் வேண்டும். ஆனால் பாருங்கோ!! கிந்தூஸ்தான் என்பது ஒரு காலத்தில் எப்படி இந்தியாவினுள் அடங்கியிருந்தது என்பதை ஒத்து;க கொள்கின்றீர்களா? அது போலத் தான் ஆருரனும் சொல்கின்றார் பரதமும் தமிழருக்குச் சொந்தமானது. அதைப் பாப்பாணர் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதை.
தூயவன்.. நீங்கள் ஆரூரனின் வாதத்தை மட்டும் பார்க்கிறீர்கள். தற்போதைய பரதநாட்டிய நூல்களும் ஆசிரியர்களும் கற்றுக்கொடுப்பதைப் பற்றி..அவற்றை நிராகரிக்கக் கூடிய வலுவான ஆதாரங்கள் பற்றி எதுவும் இங்கு கதைக்கப்படவில்லை. பார்ப்பர்ணர்கள் வலுவான நீண்ட வரலாற்றைப் பதிய விட்டிருக்கிறார்கள்..! அதை ஒரு சில கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பதிலும் அவர்களின் வாதத்தின் வழி சென்று நிராகரிப்புக்களைக் கொடுத்து வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். இலங்கையில் மாற்றி எழுதப்பட்ட தமிழர்கள் வரலாற்றையே நாம் இன்னும் திருத்தமுடியாது இருக்கிறோம். பரந்த பாரத தேசம் அடங்கிய சர்ச்சைக்குரிய புனைகதைகள் அடங்கிய ஒரு விடயத்தை ஒரு சிலரின் கட்டுரைகளால் தகர்க்க முடியும் என்பது சாத்தியமானதல்ல. அதைவிடவும் அவர்களின் பாதையில் சென்று அதை நிராகரித்துக்காட்ட வேண்டிய கடப்பாடு உண்டு..! அதை உணரத்தவறியவர்களில் நீங்களும் இருப்பது வருத்தமளிக்கிறது. நாட்டில் எதிர்க்கட்சி இருப்பது சாபக்கேட்டுக்கல்ல.. ஆளும் கட்சியின் தவறுகளை செயற்பாடுகளை செம்மைப்படுத்தவே.! அந்த வகையில் உங்கள் கருத்தை உணர்வுபூர்வமாக மட்டுமன்றி நியாயம் பிறப்பிக்கவல்லதாகவும் வையுங்கள். தவறான கண்ணோட்டங்களால் தனிநபர் வசைபாடல்கள் செய்வதால் இருக்கும் கருத்துக்கள் மாறிவிடாது. கருத்துச் சொல்லப்படும் போதுதான் விளக்கமும் சான்றும் தெளிவும் பிறக்கும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

