01-17-2006, 11:16 AM
<b>சிறப்புப் படையியல் பயிற்சிக் கல்லூரியில் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் நினைவு தினம் </b>
கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையியல் பயிற்சிக் கல்லூரியில் சிறப்புற நினைவு கூரப்பட்டது. காலை விசேட படையியல் ஒத்திகைப் பயிற்சியைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு மேஜர் சோதியா படையணியைச் சேர்ந்த வேணி தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் பொதுச் சுடரினை வடபோர் முனைக் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான அன்ரன் ஏற்றிவைத்தைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியை தளபதி ஜெரி ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து கேணல் கிட்டு உட்பட10 வேங்கைகளின் திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரினை தளபதி யாதுமூரான் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து கேணல் கிட்டுவின் திருவுருவப்படத்துக்கு மலர் மாலையை சாள்ஸ் அன்ரணி சிறப்புப் படையணி பொறுப்பாளர்களில் ஒருவரான புலிக்குட்டி ஏற்றி வைத்தார்.
பொது மாவீரர் படத்திற்கான மலர் மாலையை போர்ப்பயிற்சி ஆசிரியர் தமிழ்நிலா அணிவித்து வைத்தார். 2001ஆம் ஆண்டு இதேநாள் வீரச்சாவடைந்த மாலதி படையணி தளபதி லெப்.கேணல் மதியின் திருவுருவப்படத்திற்கான மலர் மாலையை மாலதி படையணி போராளி கலைமகள் அணிவித்தார்.
அகவணக்கம், உறுதியுரை என்பவற்றை அடுத்து கடந்த 3 நாள்கள் கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளில் 13ஆம் ஆண்டு ஞாபகார்த்தமாக நடந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் மென்பந்து துடுப்பாட்டம், உதைபந்தாட்டம் வலைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மாலை 7:30 மணிக்கு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி போராளி மாநிலவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அகவணக்கத்தைத் தொடர்ந்து போராளிகளின் கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன. நினைவுரையினை ராஜன் கல்விப் பிரிவு ஆசிரியர் குமரன் அவர்கள் நிகழ்த்தினார். வெற்றி பெற்ற அணிகளுக்கும் விளையாட்டில் நடுவர்களாக கடமையாற்றிய ஆசிரியர்களுக்குமான பரிசில்களை வடபோர் முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து போராளிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=5052
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>

"
"
"