01-17-2006, 11:09 AM
<b>வெல்லாவெளி, பாலையடிவட்டையில் நினைவு நிகழ்வுகள்</b>
வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வேங்கைகளின் 13வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று வெல்லாவெளிக் கோட்ட படையணி போராளிகளால் படைமுகாமில் காலை 8.30 மணியளவில் இடம் பெற்றது. இதில் பொதுச்சுடரினை வெல்லாவெளிக் கோட்டத் தளபதி கி.யோகராஜ் ஏற்றி வைக்க, தேசியக் கொடியினை பொறுப்பாளர்களில் ஒருவரான ஆதித்தனும், ஈகச்சுடரினை படை முகாம் பொறுப்பாளர் செல்வக் கணேஸ் ஏற்றி வைத்தார்.
பத்து மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு போராளிகளால் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வெல்லாவெளிக் கோட்ட தளபதி கி.யோகராஜ் சிறப்புரையும் நிகழ்த்தினார்.
இதேவேளை நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் வெல்லாவெளிப் பிரதேச ஊரக மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 13ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் பாலையடிவட்டை யில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதில் பொதுச்சுடரினை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் பா.தயாமோகன் ஏற்றி வைக்க தேசியக் கொடியினை வெல்லாவெளிக் கோட்டத்தளபதி கி.யோகராஜ் மற்றும் ஈகச்சுடரினை கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் தமிழார்வன் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து போராளிகள், பொதுமக்களால் மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாலையடிவட்டை பொது விளையாட்டு மைதானத்தில் ஊரக மேம்பாட்டுப் பேரவைத் தலைவர் தலைமையில் பிரதேச பொறுப்பாளர் கார்த்திக் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது
<b><i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>

"
"
"