01-17-2006, 11:02 AM
<b>புதுமண்டபத்தடி, ஆலங்குளத்திலும் கேணல் கிட்டு நினைவு தினம்
சிறிலங்கா - இந்திய அரசுகளின் கூட்டுச் சதியால் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 13ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் புதுமண்டபத்தடியில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் ஊரக மேம்பாட்டுப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் க.அரிகரன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் பொதுச்சுடரினை மாவடிமுன்மாரிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் மா.தீபன் ஏற்றி வைக்க, தேசியக் கொடியினை மாவட்டத் துணை அரசியல்துறைப் பொறுப்பாளர் சீராளன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரினை மாவடிமுன்மாரிக்கோட்ட மகளிர் அரசியல் பொறுப்பாளர் த.கவிதா ஏற்றி வைத்தார்.
பின்னர் கேணல் கிட்டுவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலையினை இரு மாவீரர்களின் தாயாரான லெட்சுமி அவர்கள் அணிவித்தார். ஏனைய வேங்கைகளின் திருவுருவப் படங்களிற்கு போராளிகள், பொதுமக்கள் எனப் பலரால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது
http://www.battieezhanatham.com/2005/modul...rticle&sid=5054
[b]<i>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>

"
"
"