01-17-2006, 10:36 AM
<b><span style='color:red'>கடற்படையினரின் வாகனம் மீது குண்டுத் தாக்குதல்: திருப்பித் தாக்கியதில் இரண்டு பொதுமக்கள் பலி! </b>
திருகோணமலை நிலாவெளியில் சிறிலங்கா கடற்படையினரின் வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலை அடுத்து படையினர் மேற்கொண்ட கண்முடித்தனமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மக்களில் நால்வர் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுத்தாக்குதலின் போது வாகனத்தில் பயணம் செய்த 13 படையினர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் திருகோணமலை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை துறைமுக படைத்தளத்துக்கு படையினரை ஏற்றிச்சென்ற வாகனத்தை இலக்கு வைத்து திருகோணமலை டிப்போவுக்கு அருகில்- மூன்றாவது மைல் கல்லுக்கு அருகில் - சைக்கிள் ஒன்றில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தததை அடுத்தே கண்மூடித்தனமான இந்தத்தாக்குதல் இடம்பெற்றது.
இந்த சைக்கிள் குண்டு தொலைவிலிருந்து ரிமோட் கொண்ட்ரோலர் மூலம் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் இலக்கு தவறிவிட்டது என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திருகோணமலை படைத்தளத்திற்கு வந்த விசேட உலங்குவானூர்தி மூலம் காயமடைந்த படையினரில் சிலரை கொழும்புக்கு ஏற்றிச்சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினரின் தாக்குதலில் ஒரு பொதுமகனுக்கு தலையில் சூடு பட்டுள்ளதாகவும் அவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன.</span>
<b><i>தகவல் மூலம்-புதினம்.கொம்</i></b>

"
"
"