01-17-2006, 08:13 AM
வெங்காயத்தின் கூற்றில் உண்மை இருக்கிறது. பெற்ற தாய் அந்த பெற்றவயிறே பசியால் கொதிக்கும் போது மகனோ தாய் நாட்டின் மீது மோகங்கொண்டவர் போல் மற்றவர்களுக்கு காண்பிக்க தாயகப்பற்றாளர் போல் நாடகம் ஆடுவார். ஏன் முன் ஒருகாலத்தில் நானும் அப்படிதான் இருந்தேன். இப்பொழுது திருந்திவிட்டேன். இதே பேர்வழிகள் எங்களில் நிறையவே இருக்கின்றனர். இவர்கள் மனம் மாறவேண்டும். தாயகத்தை எப்படி நாம் நேசிக்கின்றோமோ அதே போல் பெற்ற தாயையும் நேசிக்க வேண்டும். தனக்கடங்கித் தான் தானம் என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது.

