01-11-2004, 04:25 PM
தகவலுக்கு நன்றி. ஆனால் சம்பந்தப்பட்ட நபரை ஒரு நபராக அடையாளம் காணாமல் ஒரு இனத்தின் பெயரால் சுட்டுவது முற்றிலும் பொருத்தமற்றது. எல்லா இனத்திலும் இப்படியான போக்கிரிகள் பொதுவாகவேயுள்ளனர். அப்படியான நபர்களை அவர்களாகவே இனம் காணுவோம். அவர்கள் குலத்தை கோத்திரத்தை இழுக்கவேண்டிய தேவையில்லை. இப்படியான கருத்துக்கள் இனவிரோதத்தையும் குரோத உணர்வையும் வளர்க்க மட்டுமே உதவும். இலண்டனில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருமளவிலான எம்மவர்கள் கள்ளமட்டை போடுவதாக அடிக்கடி கூறப்படுவதுண்டு. அதைவைத்து தமிழர்கள் கள்ள மட்டைபோடுகிறார்கள் என்று யாராவது அதனைப்பொதுமைப்படுத்தினால் நாம் எப்படியான உணர்வைப் பெறுவோம் என்பதை சிந்தித்துப் பார்த்தது அதன்வழியே இந்தச் சம்பவத்தையும் நோக்கல் நன்று.

