Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மன்னாரில் கைக்குண்டுத் தாக்குதல்: சிப்பாய் பலி
#1
மன்னாரில் கைக்குண்டுத் தாக்குதல்: சிப்பாய் பலி- பொதுமகன் காயம்


மன்னார் பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள சிறிலங்கா இராணுவ காவலரண் மீது நேற்று திங்கட்கிழமை இரவு 8:50 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


மருத்துவமனை எல்லைக்குள் உள்ள பாலமுருகன் ஆலயத்திற்கு அருகே, சிறிலங்கா கடற்படையும் இராணுவப்படையும் இணைந்து, காவலரண் அமைத்துள்ளனர்.

கைக்குண்டு வெடித்ததும், அவ்விடத்திற்கு விரைந்த படையினர், கோபவெறியுடன் தாறுமாறாகச் சுட்டதில், பாலமுருகன் ஆலய முன்விறாந்தையில் தூங்கிக்கொண்டிருந்த அப்பாவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.

அப்பகுதியில் காண்போரையெல்லாம் அடித்து விரட்டிய படையினர், தொடர்ந்து தேடுதல் என்ற பெயரில், வீடுவீடாகப் புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்ட சிப்பாயின் உடல், மருத்துவமனை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த பொதுமகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுட்டது: புதினம்
Reply


Messages In This Thread
மன்னாரில் கைக்குண்டுத் தாக்குதல்: சிப்பாய் பலி - by ஊமை - 01-16-2006, 11:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)