01-16-2006, 09:22 PM
<b><span style='color:brown'>திருமலையில் கைவிடப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம்
திருகோணமலை பொங்குதமிழ் சமூகம் நடாத்திவந்த பணிபுறக்கணிப்புப் போராட்டம் நேற்றுமுதல் கைவிடப்பட்டுள்ளது. வடக்கு - கிழக்கு மகாணத்திற்கான விசேட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் பொங்கு தமிழ் சமூகம் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டமையை அடுத்தே இப்பணிப் புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
1. இராணுவத்தினர் காவல் நடவடிக்கை, ரோந்து நடவடிக்கை, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடும் போது முகத்தை கறுப்புத் துணியால் மறைத்துக் கொண்டுசெயல்படுதல் தவிர்க்கப்படவேண்டும்.
2. தொழில்நுட்பக் கல்லூரியில் தங்கியிருக்கும் படையினரும், ஆலயங்களில், பாடசாலைகள், மற்றும் மதநிறுவனங்கள் என்பனவற்றில் நிறுத்தப்பட்டுள்ள படையினர் விலக் கப்பட வேண்டும்.
3. வீதித்தடைகள் என்பனவற்றில் பணிக்கு அமர்த்தப்படுகின்ற படையினருடன் பொலிசாரும் சேவையில் ஈடுபடுத்தப்படவேண்டும். பொலிசாரின் எண்ணிக்கை படையினரதும் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகமாக இருத்தல்வேண்டும்.
4. ஊர்காவல் படையினர் சீருடையுடன் மாத்திரம் பொலிசாருடன் இணைந்து பணியில் ஈடுபடுதல் வேண்டும்@ பொலிசார் இன்றி இவர்கள் தனித்து செயற்படமுடியது.
5. தேடுதல் நடவடிக்கை மற்றும் கைதுகளின்போது கைது செய்யப்படுவதற்கான காரணம், கைது செய்யப்படும் நபர், கைது செய்து கொண்டு செல்லப்படும் இடம் என்பன உறவினர்களுக்கு எழுத்து மூலம் கொடுக்கவேண்டும்.
இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய கோரிக்கைகளை தாம் அமுல்படுத்துவதாகவும் போராட்டத்தினை கைவிடுமாறும் வேண்டினார்.
நேற்றுக்காலை 11 மணி தொடக்கம் 1 மணி வரை பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் இந்து குருமார்கள், கத்தோலிக்க மதத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், சமூகநலன் விரும்பிகள், பொங்கு தமிழ்சமூகம், தமிழ் மக்கள் பேரவை என 42 பேர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அதனை அடுத்து பொங்கு தமிழ் சமூகம் கலந்துரையாடல் நடாத்தி அவர்களது தீர்மானத்திற்கு அமைய இன்று முதல் கர்த்தால் நடை பெறமாட்டாது என தெரிவித்தன</span>
[b]<i>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</i></b>

"
"
"