01-16-2006, 09:10 PM
<b>கேணல் கிட்டு நினைவாக முத்தமிழ் கலையரங்கம் - 2006 </b>
இந்திய - சிறிலங்கா கூட்டுச் சதியினால் வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு நினைவு முத்தழிழ் கலையரங்கம் - 2006 இன்று திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
புலிகளின்குரல் அமலன் அரங்கில் காலை 10 மணிக்கு இச்சிறப்பு முத்தமிழ் கலையரங்கம் ஆரம்பமாகியது.
பொதுச்சுடரை தமிழீழ மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் ஏற்றிவைக்க, கேணல் கிட்டுவின் திருவுருவப்படத்துக்கான மலர்மாலையினை நவம் அறிவுக்கூடப் பொறுப்பாளர் கலைக்கோன் அணிவித்தார்.
தொடர்ந்து சங்கநாதம் கலைஞர்களின் முத்தமிழ் நடனம் வரவேற்பு நடனம் ஆகியன இடம்பெற்றன.
புலிகளின்குரல் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகியது.
அவர் தனதுரையில்,
விடுதலைப் புலிகள் எப்படி ஊடகங்களை வளர்த்தெடுத்தார்கள், பயன்படுத்தினார்கள், அதில் மூத்த தளபதி கேணல் கிட்டுவின் செயற்பாடுகள் என்பது பற்றியும் புலிகளின்குரலின் ஒலிபரப்புப்பணி, வானொலி மன்றங்களின் இயக்கம், முத்தமிழ் கலையரங்கங்கள் என்பன பற்றி விரிவாகக் கூறினார்.
வரவேற்புரையை புலிகளின்குரல் இசையமைப்பாளர் ப.சிறீவரதன் நிகழ்த்தினார்.
வானொலி மன்றங்களின் சார்பில் ஓய்வுபெற்ற உதவிக்கல்வி அதிகாரி க.சரவணபவன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து கேணல் கிட்டு சுற்றுக்கேடயத்தை 2005 ஆம் ஆண்டில் வென்ற மல்லாவி வானொலி மன்றத்திற்கு அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் வழங்கினார்.
மல்லாவி வானொலி மன்றத் தலைவர் சுபநேசன் கேணல் கிட்டு நினைவுக் கேடயத்தை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து சிறப்புரையை தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் நிகழ்த்தினார்.
கேணல் கிட்டு நினைவு முத்தமிழ் கலையரங்கம் - 2006 நிகழ்ச்சிக்கு உறுதுணை வழங்கிய தமிழீழ வைப்பகங்களின் மேலாளர் பாலகிருஸ்ணன் புலிகளின்குரல் பற்றிய மதிபீட்டினை தெரிவித்தார்.
தொடர்ந்து புலிகளின்குரல் முத்தமிழ் கலையரங்கம் 2005-ல் தெரிவுசெய்ப்பட்ட கலைஞர்களுக்கும், வானொலி மன்றங்களில் தொடர்ந்து முனைப்புடன செயலாற்றி வருபவர்களுக்கும், நாளாந்த அறிவியல் வினாடி வினாப்போட்டிகளில் வென்றவர்களுக்கும் சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கப்பட்டன.
சான்றிதழ்கள் பரிசில்களை தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன், வணிக ஒன்றியத்தலைவர் வெற்றியரசன், லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி சிறப்புத்தளபதி கோபால், கடற்புலிகள் அணியின் மோகன், இளந்தென்றல் வாணிபப் பொறுப்பாளர் சேரன், தமிழீழ வைப்பக மேலாளர் பாலகிருஸ்ணன், அனைத்துலக தொடர்பக நந்தவனம் பொறுப்பாளர் திலீபன், நவம் அறிவுக்கூட சிறப்புப் பொறுப்பாளர் தேவன், நவம் அறிவுக்கூட அதிபர் சிவா, வைத்திய கலாநிதி போராளி அஜந்தன் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து முத்தமிழ்க் கலையரங்குகளில் சிறப்பு நிகழ்ச்சியாக சங்கநாதம் நிகழ்ச்சியை வழங்கும் பேபி ஆசிரியை குழுவினருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சிகள் பற்றி புலிகளின்குரல் கலைப்பிரிவு மேலாளர் பா.கபிலன், முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சி மதிப்பீட்டாளர்கள் சார்பில் புலிகளின்குரல் நிகழ்ச்சி மதிப்பீட்டு மேலாளர் ந.கோகுலன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
நன்றியுரையை புலிகளின்குரல் துணைப்பொறுப்பாளர் வி.செயல்வீரன் வழங்கினார்.
2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புலிகளின்குரல் வானொலி மன்றங்கள் ஊடாக மக்களின் கலை வெளிப்பாடுகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு புலிகளின்குரல் ஊடாக ஒலிபரப்பப்பட்டு வருவதுடன் மாதாந்தம் மன்றங்களின் கலை நிகழ்ச்சிகளின் அரங்கேற்றமாக முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இன்றைய முத்தமிழ் கலையரங்கம் 2006-ல் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற வானொலி மன்றங்களின் முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சிகளில் தெரிவுசெய்யப்பட்ட கலைஞர்களுக்கு 15 சான்றிதழ்களும் பரிசில்களும், புலிகளின்குரல் நாளாந்த அவதானிப்புப்போட்டியில் தொடர்ந்து சரியான விடைகளை எழுதிய 29 பேருக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.
புலிகளின்குரல் வானொலி மன்றங்களில் தொடர்ச்சியாக் தீவிரமாக செயற்பட்டு வருபவர்கள் 22 பேருக்கும் சிறப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டன.
புலிகளின்குரலில் தற்போது மல்லாவி, விசுவமடு, வடமராட்சி கிழக்கு, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, முள்ளியவளை, வட்டக்கச்சி, ஆகிய வானொலி மன்றங்கள் உள்ளன. இதுவரை 44 முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சிகளும், 19 சிறப்பு முத்தமிழ் கலையரங்கு நிகழ்ச்சிகளுமாக 63 முத்தமிழ் கலையரங்க நிகழ்ச்சிகள் வானொலி மன்றங்களிலும், நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா காலங்களிலும் புலிகளின்குரலால் நடத்தப்பட்டன.
கேணல் கிட்டு நினைவாக நடத்தப்படுகின்ற புலிகளின்குரல் தொடர் ஒலிபரப்பில் முத்தமிழ் கலையரங்கம் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.
<i><b>தகவல் மூலம் - புதினம்</b></i>

"
"
"