01-16-2006, 07:39 PM
குளக்காட்டான், சில வாரங்களுக்கு முன்னர் தமிழ் ஒளி இணையத்தில் எமது கடல் வளம் பற்றிய விவரணம் ஒன்று பார்க்க கிடைத்தது. அந்த நிகழ்ச்சியை தற்செயலாக பார்க்க கிடைத்த படியால் இடையில் இருந்து தான் பார்த்தேன். அதனால் நிகழ்ச்சியின் பெயர் தெரியவில்லை.
அதில் ஒரு பாதிரியார் மிகவும் தெளிவாக எமது கடல வளங்கள் சுறண்டப்படுவது பற்றி கூறினார். மீனவர்கள் கவனிக்காது கர்பிணி மீன்கள் குஞ்சு மீன்கள் போன்றவற்றையும் பிடித்து விப்பதால் உள்ள தாக்கம், மற்றது உலக சந்தையில் எமது பிரதேசங்களில் கிடைக்கு கடல் உணவு வகைகளின் மதிப்பும் எம்மவர் விற்கும் விலைக்கும் உள்ள இடவெளிகள் பற்றி மிகவும் அழகாக விளக்கி இருந்தார். அது ஒரு தொடராக வந்த நிகழ்ச்சி என நினைக்கிறேன்.
அவர் அந்த நிகழ்ச்சியில் கூறிய ஒரு முக்கிய விடையம் என்ன வென்றால் எமது சமூகத்தில் கடல்வள பாதுகாப்பு, திட்டமிடல், பக்கவிளைவுகள் குறைந்த பிடிக்கும் முறைகள், சந்தைப்படுத்தல் போன்றவற்றை ஒருவரும் கற்கை நெறியாக கருதி கவனம் செலுத்துவதில்லை என்பது. அத்தோடு எமது பிரதேசங்களில் உள்ள உயர் கல்விநிறுவனங்களும் இவை சம்பந்தமாக ஒன்றும் முயற்சிக்கவில்லை. ஆனால் நோர்வே போன்ற நாடுகளில் இவை சம்பந்தமாக உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்யும் நிலை வரை கவனம் எடுக்கிறார்கள். இந்த துறை சார்ந்த விடையங்களில் புலமைப்பரிசில் கற்கைநெறிகளை வளங்கும் கல்விநிறுவனங்களும் பற்றி தெரிந்தவற்றையும் எழுதுங்கோ.