Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கல் திருநாள்
#2
இங்கு சிங்கையிலே தைப் பொங்கல் நாளில்<i> "தமிழ் முரசு"</i>(14/01/2006) பத்திரிகையில் எண்ணற்ற விளம்பரங்கள்...அதில் பல கோயில்களினது...அதில் பயனுறுதியான "தகவல்" தந்த ஒரே விளம்பரமாக எனக்குப் பட்ட <i>[b<span style='color:violet'>]\"அருள்மிகு செண்பக விநாயகர் ஆலய\"[/b]</i>த்தின் \"பொங்கல் வாழ்த்து தைப் பொங்கல் என்பதை இவ் விளம்பரத்தகவல் மூலம் மேலும் உறுதிப்படுத்திக்கொண்டேன்....


<b>பொங்கலோ பொங்கல்-தமிழர் திருநாளில் ஒரு சிந்தனை

பொங்கல் திருநாள் மார்கழி மாதம் தொடங்கி திருவாதிரை வழிபாட்டினைட்ள்தோடர்ந்து தை முதல் நாளில் தமிழினம் கொண்டாடும் முதன்மைத் திருநாள்.தமிழ் மக்கள் வாழ்வியல் முறைமையின் இயற்கை வளம் போற்றி செய் தொழில் பொங்க-தொன்று தொட்டு வரும் தமிழ்க்கலையொழுக்கப் பண்பாட்டின் தோன்றிய திருநாள்.ஞாயிறு ஒளி உலகச் சுற்றின் வடக்கு நோக்கி வலம் வரத் தொடங்கும் தை முதல் நாளில் வருவதும் தமிழரின் பொழுது அறிதிறனுக்கு முதலாகும்.

<i>[b]உழவு-உழப்பு-உழைப்பு</b></i>

பண்டைத் தமிழகத்தில் உழவுத் தொழிலே மக்கள் நாகரீக வாழ்வின் முதன்மையாகவும் உழைப்பிற்கெல்லாம் தலைமையாகவும் விளங்கியது.அதனால்தான் திருவள்ளுவரும்<i>,\"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்\"</i> எனக் கூறினார்<i>.\"உழவு\" என்பது செய்வினை.உழப்பு என்பது செயப்பாட்டுவினை.\"உழப்பு\" மருவி \"உழைப்பு\" என்றானது</i>.

வயலிலே களை எடுத்து,விதை விதைது தண்ணீர் பாய்ச்சி நெற்பயிரை அறுவடை செய்து முதற்காரணமாகிய அருளொளிச்சுடர் அமைந்த கதிர்க்குக் காட்டி மகிழும் தமிழர் பண்பாட்டைத் திருமுறை ஆசிரியர்களில் ஒருவரான <b>பட்டினத்தடிகள்</b> <i>பதினோராம் திருமுறையில் </i>தமிழரின் அகவழிபாட்டினை உழவின் பொருந்த \"உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ!\"எனும் பாடலில் அழகாக விளக்குகிறார்.

\"நெஞ்சமாகிய நிலத்தில் வஞ்சனையை வேரோடு அழித்துப் போக்கி,ஏர்ருர்ந்து.அன்பெனும் பாத்தி கோலி,மெய்யென்னும் எருவிட்டு,அறிவோடு பக்தி நட்டு நாள் தோறும் தெண்ணீர் பாய்ச்சி(பூசனை செய்து) அட்ங்காமல் துன்பம் செய்யும் ஐம்புலன்களுக்கு அஞ்சி உள்ளத்தினுள்ளே இறையருள் சார்ந்து,அமைதி வேலியிட்ட பின்னர் கருணை இளந்தளிர் காட்ட,புண்ணியப் பலனாய் \"அஞ்செழுத்து\" வாயில் உரைக்க முக்கண்ணும் நான்கு தோள்களும்,ஐந்து முகமும் பவளமேனியில் பால்வெண்ணீறுபூசிய மருத மாணிக்கத் தீங்கனியெனும்(சிவபிரான்) நெற்பயிர் மெல்ல மெல்ல பழுத்து கைவர....\"
என சைவத் தமிழரின் சிவபூசைச் சிறப்பை அழகாக வெளிப்படுத்துகிறார்</span>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-16-2006, 11:07 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)