Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்க புலனாய்வுத்துறையின் உயர்மட்டக் குழு கொழும்பு வருகை!
#1
[b]அமெரிக்க புலனாய்வுத்துறையின் உயர்மட்டக் குழு கொழும்பு வருகை!
[ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2006, 16:06 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
அமெரிக்க புலனாய்வுத்துறையான எஃப்.பி.ஐ அதிகாரிகள் குழு ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24.01.06) கொழும்பு வரவுள்ளது.


இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள், யுத்த நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் அபாயம் ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு நடடிவடிக்கை எடுக்கக்கோரி அண்மையில் அமெரிக்காவுக்கு நேரடியாக சென்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இக்குழுவினரின் வருகை அமையவுள்ளது என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்படிக்குழுவில் அமெரிக்க இராஜாங்க அமைச்சு அதிகாரிகள் சிலரும் இடம்பெறவுள்ளனர் எனத் தெரிகிறது.

தாம் தேடி அழித்தொழித்து வரும் பயங்கரவாதிகளுடன் இலங்கையில் உள்ள ஆயுதக்குழுக்களுக்கு தொடர்பு ஏதேனும் உள்ளதா? அந்த அமைப்புக்களின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் என்ன போன்ற விடயங்களும் இந்த குழு கொழும்பில் மேற்கொள்ளவுள்ள உயர்மட்டப்பேச்சுக்களில் இடம்பெறும் என தெரியவருகிறது.

இதேவேளை, இக்குழுவினர் வருகை தரும் அதே தினம் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அரசியல் விவகார அமைச்சர் நிக்கலஸ் பேர்ன்ஸ் தலைமையிலான குழுவினர் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு கொழும்பு வரவுள்ளனர்.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேசவுள்ள இவர்கள், சந்திப்பை முடித்துக்கொண்டு இந்தியா செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அங்கு, இம்மாத இறுதியில் செல்லவுள்ள அமெரிக்க அரச தலைவரின் விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபடவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு வரவுள்ள நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மையும் சந்தித்து இலங்கை நிலவரம் பற்றி பேசுவர் என்று அறியவருகிறது.

தகவல் மூலம்- புதினம் .கொம்
"
"
Reply


Messages In This Thread
அமெரிக்க புலனாய்வுத்துறையின் உயர்மட்டக் குழு கொழும்பு வருகை! - by மேகநாதன் - 01-16-2006, 06:45 AM
[No subject] - by aathipan - 01-16-2006, 07:09 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 07:19 AM
[No subject] - by kurukaalapoovan - 01-16-2006, 08:02 AM
[No subject] - by தூயவன் - 01-17-2006, 06:31 AM
[No subject] - by aathipan - 01-17-2006, 07:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)