01-16-2006, 06:30 AM
<span style='color:red'><b>திருமலை மாநகர சபை விடுதி மீது கைக்குண்டு வீச்சு நால்வர் காயம் </b>
திருமலையில் நேற்றுப் பிற்பகல் வீடொன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமலை நகரிலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள காந்தி நகரிலுள்ள மாநகர சபை விடுதி கட்டிடம் மீதே இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
திருமலையில் சிங்கள மக்களால் கடைப்பிடிக்கப்பட்ட ஹர்த்தால் விலக்கப்பட்டுள்ளதாக அரச படையினர் அறிவித்து சில மணித்தியாலங்களில் இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்று பொங்கல் தினம் என்பதால் வீட்டிலிருந்து பொங்கல் கொண்டாடிவிட்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போதே மேற்படி குடும்பத்தாரின் இருப்பிடத்தில் இந்த கைக்குண்டு விழுந்து வெடித்துள்ளது.
இச்சம்பவத்தினால், வீரசிங்கம் ராஜேந்திரகுமார் (35) என்ற உத்தியோகஸ்தர், அவரது மனைவி, ராஜேந்திரகுமார் ராஜேஸ்வரி (35), இவர்களின் பிள்ளைகளான ராஜேந்திரகுமார் வித்தியாகரன் (04), ராஜேந்திரகுமார் சாஜிவித்தியா (06) ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி இடத்திற்கு யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் பார்வையிடுவதற்கு வந்தபோது அவ்விடத்தில் நின்ற ஸ்ரீலங்கா விமானப் படையினரும், ஸ்ரீலங்கா இராணுவத்தினரும், அவர்களை விசாரணைகளை செய்யவிடாது தடுத்துள்ளனர். பின்னர் உப்புவெளி ஸ்ரீலங்கா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</span>
www.battieezhanatham.com

"
"
"