01-16-2006, 04:35 AM
puthiravan Wrote:வானம்பாடி, விசயம் சூடானது தான் என்று உறுதிப்படுத்தியதற்கு நன்றி!
'சண்டே லீடர்' ஆசிரியர் விசாரித்துப்பார்க்காமல் எழுதியுருக்கமாட்டார் என்று நினைக்கிறேன், 'சிராந்தி' கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர் என்று.
ஆமா தெரியாமதான் கேக்கிறேன். இந்த சிங்களவன்ட மண்டைக்க ஒரு கோதாரியும் இல்லயோ...ராஜாங்க விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா செல்லும் செல்லும் போது பிள்ளை குட்டி, 80 அமைச்சர்கள் என்று முழு பட்டாளத்தையும் கூட்டிச்செல்வதா..
கோயில் நிர்வாகம் கோயிலை கழுவுதோ இல்லையோ...அது விசயமல்ல...சண்டே லீடர் ஆசிரியர் நார் நாரா கிழிக்க போவது உறுதி என்று ராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன.
இருந்து பாருங்கள், இன்று இந்த பிரச்சனை சுமூகமாக சென்றாலும் 'லீடர்' ஆசிரியரின் உயிருக்கு விலை குறிக்கப்பட்டதாகவே கொள்ள வேண்டும். அநியாயமாக மாண்டு போன சிவராம், நிமல்ராஜன் போன்ற தமிழ் பத்திரிகையாசிரியர்களுடன் மேலும் சில 'நல்ல' சிங்கள எழுத்தாளர்கள் வரிசையில் இவரது பெயரும் அடக்கப்பட போவது உறுதி. "நான் ஜனாதிபதியல்ல ரவடிடா" என்னும் பாணியில் விடப்பட்டிருக்கிறது சவால்.
சிரந்தி அக்காலப்பகுதியில் அழகுராணி போட்டிக்கு பங்குபற்றினவராம். அப்படிப்பட்ட பெருமை அவருக்கு உண்டு.
மேலும் சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மகாராஜா ஊடகங்களில் தோன்றி, அரசியல் கலந்துரையாடல்கள் மூலம், ஒரு காலத்தில் சுதந்திர முண்ணனியையும், ஜேவிபியையும் காராசாரமாக விவாதித்தவர்.( இப்போதும் மகராஜாவில் பணிபுரிகின்றாரோ தெரியவில்லை)
எனவே சண்டேலீடர் ஜனாதிபதியைப் பற்றி சும்மா விட்டு வைக்கப் போவதில்லை. ஆனால் பாதுகாப்பில் லசந்தவிற்கு ஏதும் நடந்தால் அதற்கு ஜனாதிபதி தான் பொறுப்பு கூறவேண்டிய தேவை எனி வரும் காலங்களில் உண்டு.
[size=14] ' '

