Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சகோதரி தர்சினிக்கு லண்டனில் உணர்வுபூர்வமான அஞ்சலி...
#1
சிங்கள இனவாத காடை மிருகங்களினால் புங்குடுதீவில் கற்பளிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எம் சகோதரி தர்சினி, படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோருக்கு இன்று லண்டன் புறநகர் பகுதியான கறோவில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பெருந்தொகையான மக்கள் மண்டபத்தை நிறைத்திருந்தார்கள்.

இவ்வஞ்சலி நிகழ்வில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் திரு றொபோட் இவன்ஸ், கிங்ஸ்டன் மாநகர முதல்வர் யோகன் யோகநாதன், நகரமன்ற உறுப்பினர்கள் திரு இடைக்காடர், செல்வி மான் போன்றோர் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி உரையாற்றியிருந்தார்கள்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அனைவரது கருத்தும், இப்படியான சம்பவங்கள் இனி நடை பெறாமலிருக்க சுதந்திர தமிழீழம் தான் தீர்வாக இருக்குமென்று உரையாற்றியதையும், சிங்கள அரசினால் ஏற்படுத்தப்படும் விசாரணைக் குழுக்களினால் எவ்வித உண்மைகளும் வெளிவர போவதில்லையென்றும், இது போன்று முன்பு பல தடவைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் விசாரனைக் குழுக்களுக்கே என்ன நடைபெற்றதென்பதே தெரியாதென்பதுகளை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.

லண்டனில் இனி வர இருக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கான தேர்தல், நகர சபைகளுக்கான தேர்தல்களில் சில பகுதிகளில் எமது வாக்குகளும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளதையும், இதை உரிய முறையில் பயன்படுத்த வேண்டிய தேவைகளும் இங்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறிய அளவு நிதியும் தர்சினியின் குடும்பத்திற்கு சேகரிக்கப்பட்டது.
" "
Reply


Messages In This Thread
சகோதரி தர்சினிக்கு லண்டனில் உணர்வுபூர்வமான அஞ்சலி... - by cannon - 01-15-2006, 10:48 PM
[No subject] - by cannon - 01-16-2006, 09:29 PM
[No subject] - by Aravinthan - 01-16-2006, 11:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)