01-15-2006, 09:09 PM
Quote:இங்கு சிறுவர்கள் அல்ல கருத்தாடுவது. சின்னப்பிள்ளை என்று உங்களை அடையாளம் காட்டி அனுதாபம் தேட வேண்டிய அவசியமில்லை. அப்படிப் பார்த்தால் இங்கு ஒரு சிலரைத் தவிர கிட்டத்தட்ட எல்லோருமே அனுபவத்தால் சிறியவர்கள் தான்..!
குருவியாரே, உம்முடைய விதண்டாவாதத்தின் நோக்கத்தையறியத் தான் அப்படிக் கேட்டேனே தவிர அப்படி ஒரு அனுதாபத்தில் எனக்கு நம்பிக்கையுமில்லை, அப்படியான அனுதாப எனக்குத் தேவைப்படுமென்று நான் நினைக்கவுமில்லை.
Quote:[size=12]எங்கள் தகவல்கள் கூகிள் தேடற்பொறியில் முதன்மையில் உள்ள ஆக்கங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை..! கூகிள் தேடற்பொறி தனது வரிசைப்படுத்தலில் அதிகம் பார்வையிடப்படும் தளத்தையே முதன்மைப்படுத்தும்.
நீங்கள் உங்களுக்கு சார்ப்பில்லாத கருத்தை அது உண்மையோ பொய்யோ என்று ஆராயமுற்படாமல் அன்ரி தமிழ் என்றால் நாங்கள் உங்களதை புரோ தமிழ் என்று சொல்லித் தட்டிக்கழிக்கவும் நேரம் எடுக்காது. நீங்கள் சொல்லும்.
அன்றும், இன்றும் தமிழர்கள் தங்களுடைய உரிமைகளையும், தனித்துவத்தையும் நிலை நிறுத்த முயன்ற போதெல்லாம், அவர்களின் எதிரிகளை விட அந்த எதிரிகளின், தமிழ்த் தொண்டரடிப்பொடிகளின் எதிர்ப்பைத் தான் முதலில் எதிர்நோக்க வேண்டியுள்ளது. அது தான் தமிழரின் சாபக்கேடு.
தமிழ்ப்பற்றுள்ளவர்களை விட தமிழெதிரிகளும் அவர்களின் அடிவருடிகளும் தான் இணையத்தளங்களில் அதிகம். இதைப் பெரும்பாலான இந்தியத் தளங்களில் பார்க்கலாம். இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களிலும் தமிழெதிரிகள் அதிகம், தமிழை இந்தியாவின் செம்மொழியாக ஏற்றுக் கொண்ட போது, இந்தியாவில் அதை எதிர்த்தவர்களின் எண்ணிக்கை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. அதனால் எந்த Anti Tamil பதிவும் முதன்மையாகப் பார்வையிடப் படுவதும் இதனால் தான். நீர் ஒரு இணையத் தளத்தைத் தொடங்கிப் பாரும்
Quote:[size=12]செல்வி குமாரசாமி அறிஞர் (எதில் அவர் அறிஞரோ நாம் அறியோம்..பட்டம் பெற்றவரெல்லாம் அறிஞர்கள் அல்ல.) என்றதுக்காக அவர் சொல்வதெல்லாம் வேதம் என்று நீங்கள் கருதலாம். நாங்கள் கருதப் போவதில்லை. காரணம் அவருடைய கட்டுரையில் அவர் குறிப்பிட்டதுக்கு மாறாக பல கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை முறியடிக்கத்தக்க வகையில் அவருடைய கட்டுரை அமையவில்லை. இலங்கையின் கல்வித்திணைக்கள பரதநாட்டிய பாடம் கூட உங்களின் கருத்துக்களில் இருந்து மாறுபட்டதையே சொல்லிக்கொடுக்கிறது.
அவருடைய கட்டுரையில் மாறான கருத்துக்கள் இருந்தால் எடுத்து விடுங்கள் பார்க்கலாம். அப்பனே குருவி! எப்போதையா இலங்கையின் கல்வித்திணைக்களம் தமிழரின் வரலாற்றையோ, கலைகளைப் பற்றி உண்மையைப் பேசியது. நீர் தமிழெதிரிகளும், சிங்கள இனவாதத்தைப் பாடப் புத்தகங்களில் புகுத்தி, தமிழரை ஓன்றுமில்லாத வந்தேறிகளென்று காட்ட முயலும் இலங்கைக் கல்வித் திணைக்களத்தை நம்பினாலும் நம்புவேன் ஆனால் தமிழபிமானிகள் சொல்வதை நம்ப மாட்டேனென்று அடம் பிடித்தால், தமிழரின் விதியை நினைத்து நொந்து கொள்வதை விட நான் என்ன செய்ய முடியும்
Quote:[size=10]நாங்கள் கொண்டுவந்த குறித்த இணையத்தளங்களில் வந்த செய்திகள்... பாரதமுனி உருவாக்கத்தில் பிறந்த பரதநாட்டியம்...அப்புறம் தென்னிந்திய மன்னர்களால் கையகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. அரசர்கள் தங்களை மகிழ்விக்க பெண்களை பொம்மைகளாக கேலிக்கை நங்கையராக அந்தப்புரத்தில் மேடை போட்டு ஆட வைத்திருப்பார்கள். சிலப்பதிகாரமே அதுக்கு சாட்சி..! இதையே நீங்களும் உங்கள் கட்டுரையாளரும் ஏதோ ஒரு இடத்தில் திரிக்க முற்பட்டிருப்பதாக உங்கள் கட்டுரைக்கு மாற்றுக் கருத்து வைத்திருப்போர் சுட்டிக்காட்ட முடியும். நீங்கள் கிறிஸ்துவுக்குப் பின் என்பதை அவர்கள் கிறிஸ்துவுக்கு முன் அதுவும் ஆயிரக்கணக்கில் முன் என்கிறார்கள். அவர்கள் தொல்பியல் சிற்பங்களின் ஆதாரத்தோடு அந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் சதிர் வாதத்துக்கு ஏதாவது தொல்பியல் சான்றுகள் இருக்கா..??! அதாவது அவர்களுடைய கருத்தை முறியடிக்கத்தக்க வகையில்.
நான் கொண்டுவந்த கட்டுரையில் பிற்குறிப்புக்களுடன் (Footnote), பல ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களுடன் மட்டுமல்ல, அவர்கள் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பக்கங்களின் எண்களும் ஆதாரமாகத் தரப்பட்டுள்ளதைப் பார்த்தீரா?
[b]பரதமுனியின் காலம் கிறிஸ்துவுக்கு முன்பு 4000 என்பது வெறும் புருடாவென்பது பச்சைக் குழந்தைக்கும் புரியும். கி.மு. 4000 இல் பெருங்கற்கோயில்கள் கட்டப் படவில்லை. உம்மால் பரதமுனியின் நாட்டியக் கலையைச் சித்தரிக்கும் கி.மு நாலாயிரமாண்டுத் தொல்பியல் சிற்பங்கள் ஒன்றையாவது காட்ட முடியுமா?
சதிரின் தமிழ் வேர்களை, பரத நாட்டியம் தமிழரின் நாட்டியமென்பதை, சிலப்பதிகாரக் காலத்துக்கு முன்பே பல்வேறுபட்ட தமிழ் நாட்டிய வகைகள் முழுமையாக வளர்ச்சியடைந்து தமிழர்களிடமிருந்ததென்பதையும், தமிழரின் நாட்டுக்குப் பிழைக்க வந்த நாடோடிகள் தான் தமிழரின் கலைகளைத் தமிழர்களிடமிருந்து இரவல் வான்கினார்களே தவிர தமிழர்கள் இரவல் வாங்கவில்லை என்பதை நிரூபிக்கும் பல அறிஞர்களால் உலகளாவிய, பன்னாட்டு அறிஞர்கள் கூடும் மாநாடுகளில் சமர்ப்பித்த பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை என்னால் தர முடியும். ....
.\"that the very fact that only the Tamil country has been able to preserve through the ages the Bharata Natya in its original grandeur and pristine purity points to the fact that this was the dance that had been handed down by the age old ancestors of the present Tamils which later was perfected by the early Aryans.
The Tamil country especially Tanjore, has always been the seat and centre of learning and culture. It was the famous quartet of Chinnayya, Ponniah, Sivanatham [and Vadivelu of the Tanjore Court during King Sarabojis time (1798- 1824) which made a rich contribution to music and Bharatanatyam and also completed the process of re-editing the Bharathanatyam programme into its present shape with its various forms like the Alarippu, Jathiswaram, Sabdham, Varnam, Tillana etc.
The descendants of these 4 brothers formed the original stock of Nattuvanars or dance teachers of Bharatanatyam in Tanjore. Originally, they formed a community by themselves and most of them were Saivite non-brahmins, their mother tongue being Tamil Probably they were the direct descendants of the ancient Tamils.
Quote:பார்ப்பர்ணியரை தமிழ் விரோதிகளா தமிழர் எதிரிகளாக காட்டுவதும் உங்கள் கருத்தாடலில் நிகழ்ந்திருக்கும் போது அது பற்றிய உங்கள் முரண்பாடான நிலைப்பாடுகளை சொல்ல வேண்டியது கட்டாயமாகிறது. அதையே நாம் சில இடங்களில் சுட்டி இருக்கின்றோம்.
பார்ப்பனீயத்தை இந்தத் தலைப்பிற்குள் இழுத்து வந்ததே நீர் தான். பார்ப்பனீயத்தை நான் எதிர்க்கும் வேளையில் அழிந்து போகவிருந்த தமிழரின் சதிராட்டத்தைக் காத்த பெருமை தஞ்சாவூர் சகோதரர்கள், நட்டுவனார்கள் பொன்னையா, சின்னையா, வடிவேலு, சிவானந்தம் நால்வருக்கும் உரியதாக இருந்தாலும் பிராமணர்களான கிருஸ்ணையர், செல்வி. பாலசரஸ்வதி, திருமதி. ருக்மணிதேவி அருண்டேல் போன்றவர்களின் ஆற்றிய அளப்பரிய சேவை தான் தமிழரின், பரதநாட்டியமென்று இன்றழைக்கப்படும் சதிராட்டத்துக்குப் புதிய அந்தஸ்தை வழங்கி தமிழரல்லாதவர்களும் தங்களுடையதென்று வாதாட வைக்க வைத்தது என்ற உண்மையை நான் மறுக்கவுமில்லை, அதை இதே தலைப்பில் குறிப்பிட்டுமுள்ளேன்.
Quote:[size=10]இதெல்லாம் சுத்த வீராப்பு வாதங்கள். ஈழத்தமிழர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டோடு மட்டுமல்ல தென்னிந்தியத் தொடர்பு உள்ளவர்கள். ஈழத்தமிழர்களிடம் கேரளத் தொடர்பும் இருக்கிறது. குறிப்பாக உணவுப்பழக்க வழக்கம் கேரளா சார்ந்து இருக்கிறது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்கள் பேசும் மொழி கொண்டு அனைத்தும் தென்னிந்திய திராவிடர் (தமிழர்கள் உள்ளடங்கலாக) வழிவந்ததுதான். ஈழத்தமிழர்களின் வேர் அங்குதான் ஆரம்பம். இல்லை ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள் என்றால்.. ஈழத்தமிழர்களுக்கான மொழி மற்றும் வாழ்வுக்கான தொல்பியல் சான்றுகள் ஏதேனும் விசேடமாக இருக்கிறதா..??! இலங்கையில் சிங்களவர்கள் வரமுன்னர் தமிழர்கள் குடியேறி இருக்கலாம்...அதற்காக அவர்கள் தான் பூர்வகுடிகள் என்று சொல்ல சான்றுகள் இல்லை.
குருவியாருக்கு, கேரளம் என்பது பண்டைத் தமிழர்களின் சேர நாடென்பதும், சிலப்பதிகாரத்தைத் தந்த இளங்கோவடிகளும் சேர நாட்டுத் தமிழர் தான். ஈழத்தமிழர்களிடம் கேரளத் தொடர்பு இருக்கிறது என்பதை விட சேரநாட்டுத் தொடர்புண்டு சொல்வது தான் பொருத்தமானது. தமிழரின் சேரநாடு எப்படி இன்று தமிழரை வெறுக்கும் கேரளாக வந்தது, தமிழெதிரிகள் சமஸ்கிருதம் கலந்த மணிப்பிரவாளம் என்ற மொழிவழக்கின் அடிப்படையில் எப்படி இன்றைய மலையாள மொழியை உருவாக்கித் தமிழர்களைப் பிரித்து, தமிழரின் நாட்டைக் கூறு போட்ட கதை குருவிக்குத் தெரியுமோ என்னமோ.
சிங்களவர்கள் வரமுன்னர் இலங்கையில் தமிழர்கள் குடியேறியிருந்திருக்கலாமென்று புகழ் பெற்ற, சிங்கள சரித்திர ஆராய்வாளர், சேர். போல் பீரீஸ் கூறுவதைப் பாருங்கள்,
[size=14]\" ... it stands to reason that a country which was only twenty miles (18 nautical miles )from India and which would have been seen by Rameswarm fisherman every morning as they sailed out to catch their fish, would have been occupied as soon as the continent was peopled by men who understood how to sail.....
Long before the arrival of Prince Vijaya, there were in Sri Lanka five recognised isvarams of Siva which claimed and received adoration of all India. These were Tiruketeeswaram near Mahatitha; Munneeswaram dominating Salawatta and the pearl fishery; Tondeswaram near Mantota; Tirkoneswaram near the great bay of Kottiyar and Nakuleswaram near Kankesanthurai. Their situation close to these ports cannot be the result of accident or caprice and was probably determined by the concourse of a wealthy mercantile population whose religious wants called for attention ....\"
(Paul E. Pieris: Nagadipa and Buddhist Remains in Jaffna: Journal of Royal Asiatic Society, Ceylon Branch Vol.2.)

இதை ஒரு தமிழர் சொல்லாததால் குருவி நம்பும் என்று எண்ணுகிறேன். இலங்கையின் பூர்வகுடிகளாகிய, இயக்கர்களும், நாகர்களும் தமிழரினது மூதாதையர்களாகக் கூட இருந்திருக்கலாம். குருவியாருக்கு, பேசப்படும் விடயங்களைத் திசை திருப்புவதில் அளவு கடந்த ஆசை, எதற்காக இலங்கையின் பூர்வகுடிகள் யாரென்பதை இங்கு இழுத்து வருகிறீர். விரும்பினால் இன்னொரு தலைப்பில் உங்களின் கருத்தைத் தெரிவிக்கலாமே?
Quote:[size=12]எனவே தற்போதைய நிலவரப்படி ஈழத்தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு மூலவேர் தென்னிந்தியா சார்ந்துதான் உள்ளது. அங்குதான் பல ஆதாரங்களும் பொதிந்து கிடக்கிறது.
ஈழத்தமிழர்களின் கலை, கலசார பண்பாட்டு வேர்கள் தென்னிந்தியாவுடன் சார்ந்துள்ளதென்பதை விட தமிழ்நாட்டுடனும், கேரளா(சேரநாடு)வுடனும், தமிழெதிரிகளின் குள்ளநரித்தனத்தாலும், தமிழ்தலைவர்களிடம் ஒற்றுமினமையாலும், வேங்கடமலை, திருப்பதி போன்ற தமிழரின்மண், மாநிலங்கள் பிரிக்கப்படும் போது மற்ற தென்னிந்திய மாநிலங்களுக்குக் கையளிக்கப்பட்ட இடங்களில் தானுண்டு
Quote:[size=12]ஈழத்தமிழர்களின் தற்கால ஆய்வுகள் பார்ப்பர்ணியக் கண்ணோட்டத்தில் அமையாமல் புவியியல் ரீதியான பாரம்பரிய தொடர்புகள் இணைப்புக்கள் சார்ந்து ஆழமாக தமிழகத்தோடு ஒன்றித்து செய்யப்பட வேண்டிய ஒன்று..! .
உங்களுடைய இந்தக் கருத்தை நானும் ஒப்புக் கொள்கிறேன். பார்ப்பனியக் கண்ணோட்டத்தில் அமைந்த பல தமிழரைப் பற்றிய ஆய்வுகள், தமிழர்களை அவர்களின் சொந்தமண்ணிலேயே இழிவு படுத்திய உண்மையை உணர்ந்தமைக்கு என்னால் உங்களுக்கு நன்றி கூறாமல் இருக்க முடியவில்லை
Quote:[size=12]அப்போதுதான் ஈழத்தமிழர்களின் உண்மை இருப்புக்கான ஆதாரங்கள் வெளிப்படும். இல்லை வெறும் கட்டுரைகளை எழுதி அடாத்தாக அது ஈழத்தமிழன் சொந்தம் என்று பிதட்டித்திரிய வேண்டியதுதான். உலகம் ஏன் தமிழகமே அதைக் கண்டு கொள்ளாது.
[size=15][b]தமிழறிஞர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெறும் சுத்துமாத்தென்று சொல்லி விட்டு, கூகிளில் சுட்ட, தமிழர்களின் வரலாற்றை மறுத்து விடும் புருடா தான் சரியானதென்று, ஒரு தமிழ்க்களத்தில் வாடும் தானைத் தமிழர்கள் உள்ளவரை இந்த தமிழினத்தைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது