01-15-2006, 02:32 PM
இலங்கையிலிருந்து மேலும் 25 அகதிகள் வருகை
ஜனவரி 15, 2006
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திற்கு வரும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
வட கிழக்கு இலங்கையில் போர் அபாயம் அதிகரித்து வருவதால், தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர். சனிக்கிழமை 5 பேர் யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம் வந்தனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 37 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் தனுஷ்கோடி அருகே உள்ள தம்பிக்காடு என்ற இடத்திற்கு 20 பேர் அகதிகளாக வந்தனர். அவர்களை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் மண்டபம் அகதிகள் ¬முகாமு¬க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அகதிகள் வருகை தினசரி நடவடிக்கையாக மாறி வருவதையடுத்து உயர் காவல் அதிகாரிகள் தனுஷ்கோடியில் சனிக்கிழமை தீவிர ஆய்வு நடத்தினர். அங்கு தற்காலிகமாக ஒரு போலீஸ் சோதனை முகாமை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மண்டபம் அகதிகள் ¬முகாமில் தற்போது 2,269 வீடுகள் உள்ளன. அங்கு 702 அகதிகள் தங்கியுள்ளனர். இங்குள்ள பெரும்பாலான வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. எனவே பல வீடுகளில் அகதிகள் யாரும் தங்க வைக்கப்படவில்லை. தற்போது மீண்டும் அகதிகள் வருகை ஆரம்பித்திருப்பதால் அதிகாரிகளுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.
நன்றி ; தட்ஸ் தமிழ்

.
.
.