01-15-2006, 02:10 PM
kuruvikal Wrote:Aaruran Wrote:[quote=rajathiraja]எனக்கு தெரிந்து இந்திய மொழிகளில் ஒவ்வோரு மொழிக்கும் ஒரு பிராந்திய நடனம் உண்டு. உதாடணம் கதகளி,ஒடிசி.. இந்த நடனம் எல்லாமே பரதம் என்ற சதிர் நடனத்தை ஒட்டிரிருக்கும். எல்லா பிராந்திய நடன்மும் ஏதோ ஒரு தாய் கலையில் இருந்து வந்ததுதான். இதில் அது என்னுடயது இல்லை பக்கது வீட்டு காரனுடயது என்று சொல்லி வாதம் புரிவதில் என்ன பயன்??
[size=15]இது தான் எங்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்குமுள்ள வேறுபாடு. எங்களுக்குள்ள தொடர்பு தமிழ்நாட்டுடன் மட்டும் தான். பண்டைத் தமிழர்களின் கலைகளுக்கு இந்தியச் சாயம் பூச இந்தியத தமிழர்கள் மறுப்புத் தெரிவிக்கத் தயங்கலாம், ஆனால்தமிழர்களின் பழம் பெருமையின் சொந்தக்காரர்கள் இந்தியத் தமிழர்கள் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களும் தான் என்பதைமறந்து விடக் கூடாது.
தமிழர்களின் பாரம்பரியக் கலைகளையும், கட்டிடங்களையும் இந்தியாவின் கலைகளாகவும், இந்தியாவின் கட்டிடக் கலையாவும் கூறுவது வெறும் அபத்தம், நாங்கள், ஈழத்தமிழ்ர்கள் எப்படி இந்தியக் கலைகளில் சொந்தம் கொண்டாடுவது. தமிழ்நாட்டின் மற்ற மாநிலங்கள் உங்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அன்னியர்கள்.
இதெல்லாம் சுத்த வீராப்பு வாதங்கள். ஈழத்தமிழர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டோடு மட்டுமல்ல தென்னிந்தியத் தொடர்பு உள்ளவர்கள். ஈழத்தமிழர்களிடம் கேரளத் தொடர்பும் இருக்கிறது. குறிப்பாக உணவுப்பழக்க வழக்கம் கேரளா சார்ந்து இருக்கிறது. அதுமட்டுமன்றி ஈழத்தமிழர்கள் பேசும் மொழி கொண்டு அனைத்தும் தென்னிந்திய திராவிடர் (தமிழர்கள் உள்ளடங்கலாக) வழிவந்ததுதான். ஈழத்தமிழர்களின் வேர் அங்குதான் ஆரம்பம். இல்லை ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வகுடிகள் என்றால்.. ஈழத்தமிழர்களுக்கான மொழி மற்றும் வாழ்வுக்கான தொல்பியல் சான்றுகள் ஏதேனும் விசேடமாக இருக்கிறதா..??! இலங்கையில் சிங்களவர்கள் வரமுன்னர் தமிழர்கள் குடியேறி இருக்கலாம்...அதற்காக அவர்கள் தான் பூர்வகுடிகள் என்று சொல்ல சான்றுகள் இல்லை. எனவே தற்போதைய நிலவரப்படி ஈழத்தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு மூலவேர் தென்னிந்தியா சார்ந்துதான் உள்ளது. அங்குதான் பல ஆதாரங்களும் பொதிந்து கிடக்கிறது. ஈழத்தமிழர்களின் தற்கால ஆய்வுகள் பார்ப்பர்ணியக் கண்ணோட்டத்தில் அமையாமல் புவியியல் ரீதியான பாரம்பரிய தொடர்புகள் இணைப்புக்கள் சார்ந்து ஆழமாக தமிழகத்தோடு ஒன்றித்து செய்யப்பட வேண்டிய ஒன்று..! அப்போதுதான் ஈழத்தமிழர்களின் உண்மை இருப்புக்கான ஆதாரங்கள் வெளிப்படும். இல்லை வெறும் கட்டுரைகளை எழுதி அடாத்தாக அது ஈழத்தமிழன் சொந்தம் என்று பிதட்டித்திரிய வேண்டியதுதான். உலகம் ஏன் தமிழகமே அதைக் கண்டு கொள்ளாது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன குருவிகளே இப்படி சொல்லிட்டீங்க. அப்படியாயின் குமரிக்கண்டம் என்னும் கண்டத்தைப்பற்றிய ஆய்வுகட்டுரைகள் எல்லாம் பொய் என்கின்றீர்களா?? அத்தோடு ஈழத்தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கின்றது????


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 