01-15-2006, 11:15 AM
Quote:அதை விட்டு விட்டு சில anti Tamil web site க்குப் போய் வந்ததைச் சுட்டு வந்து ஒட்டி விட்டு சுத்து மாத்து, அது, இது என்று பம்மாத்து விடும் உம்மைப் பார்த்து, இன்றும் எங்களிடையில் உம்மைப் போன்ற தாழ்வு
மனப்பான்மையுடன் இருக்கும் சிலரைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
இங்கு சிறுவர்கள் அல்ல கருத்தாடுவது. சின்னப்பிள்ளை என்று உங்களை அடையாளம் காட்டி அனுதாபம் தேட வேண்டிய அவசியமில்லை. அப்படிப் பார்த்தால் இங்கு ஒரு சிலரைத் தவிர கிட்டத்தட்ட எல்லோருமே அனுபவத்தால் சிறியவர்கள் தான்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எங்கள் தகவல்கள் கூகிள் தேடற்பொறியில் முதன்மையில் உள்ள ஆக்கங்களில் இருந்து கொண்டு வரப்பட்டவை..! கூகிள் தேடற்பொறி தனது வரிசைப்படுத்தலில் அதிகம் பார்வையிடப்படும் தளத்தையே முதன்மைப்படுத்தும்.
நீங்கள் உங்களுக்கு சார்ப்பில்லாத கருத்தை அது உண்மையோ பொய்யோ என்று ஆராயமுற்படாமல் அன்ரி தமிழ் என்றால் நாங்கள் உங்களதை புரோ தமிழ் என்று சொல்லித் தட்டிக்கழிக்கவும் நேரம் எடுக்காது. நீங்கள் சொல்லும் செல்வி குமாரசாமி அறிஞர் (எதில் அவர் அறிஞரோ நாம் அறியோம்..பட்டம் பெற்றவரெல்லாம் அறிஞர்கள் அல்ல.) என்றதுக்காக அவர் சொல்வதெல்லாம் வேதம் என்று நீங்கள் கருதலாம். நாங்கள் கருதப் போவதில்லை. காரணம் அவருடைய கட்டுரையில் அவர் குறிப்பிட்டதுக்கு மாறாக பல கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை முறியடிக்கத்தக்க வகையில் அவருடைய கட்டுரை அமையவில்லை. இலங்கையின் கல்வித்திணைக்கள பரதநாட்டிய பாடம் கூட உங்களின் கருத்துக்களில் இருந்து மாறுபட்டதையே சொல்லிக்கொடுக்கிறது.
நாங்கள் கொண்டுவந்த குறித்த இணையத்தளங்களில் வந்த செய்திகள்... பாரதமுனி உருவாக்கத்தில் பிறந்த பரதநாட்டியம்...அப்புறம் தென்னிந்திய மன்னர்களால் கையகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. அரசர்கள் தங்களை மகிழ்விக்க பெண்களை பொம்மைகளாக கேலிக்கை நங்கையராக அந்தப்புரத்தில் மேடை போட்டு ஆட வைத்திருப்பார்கள். சிலப்பதிகாரமே அதுக்கு சாட்சி..! இதையே நீங்களும் உங்கள் கட்டுரையாளரும் ஏதோ ஒரு இடத்தில் திரிக்க முற்பட்டிருப்பதாக உங்கள் கட்டுரைக்கு மாற்றுக் கருத்து வைத்திருப்போர் சுட்டிக்காட்ட முடியும். நீங்கள் கிறிஸ்துவுக்குப் பின் என்பதை அவர்கள் கிறிஸ்துவுக்கு முன் அதுவும் ஆயிரக்கணக்கில் முன் என்கிறார்கள். அவர்கள் தொல்பியல் சிற்பங்களின் ஆதாரத்தோடு அந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் சதிர் வாதத்துக்கு ஏதாவது தொல்பியல் சான்றுகள் இருக்கா..??! அதாவது அவர்களுடைய கருத்தை முறியடிக்கத்தக்க வகையில்.
பார்ப்பர்ணியரை தமிழ் விரோதிகளா தமிழர் எதிரிகளாக காட்டுவதும் உங்கள் கருத்தாடலில் நிகழ்ந்திருக்கும் போது அது பற்றிய உங்கள் முரண்பாடான நிலைப்பாடுகளை சொல்ல வேண்டியது கட்டாயமாகிறது. அதையே நாம் சில இடங்களில் சுட்டி இருக்கின்றோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

