01-15-2006, 09:25 AM
rajathiraja Wrote:எனக்கு தெரிந்து இந்திய மொழிகளில் ஒவ்வோரு மொழிக்கும் ஒரு பிராந்திய நடனம் உண்டு. உதாடணம் கதகளி,ஒடிசி.. இந்த நடனம் எல்லாமே பரதம் என்ற சதிர் நடனத்தை ஒட்டிரிருக்கும். எல்லா பிராந்திய நடன்மும் ஏதோ ஒரு தாய் கலையில் இருந்து வந்ததுதான். இதில் அது என்னுடயது இல்லை பக்கது வீட்டு காரனுடயது என்று சொல்லி வாதம் புரிவதில் என்ன பயன்??
[size=15]இது தான் எங்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்குமுள்ள வேறுபாடு. எங்களுக்குள்ள தொடர்பு தமிழ்நாட்டுடன் மட்டும் தான். பண்டைத் தமிழர்களின் கலைகளுக்கு இந்தியச் சாயம் பூச இந்தியத தமிழர்கள் மறுப்புத் தெரிவிக்கத் தயங்கலாம், ஆனால்தமிழர்களின் பழம் பெருமையின் சொந்தக்காரர்கள் இந்தியத் தமிழர்கள் மட்டுமல்ல இலங்கைத் தமிழர்களும் தான் என்பதைமறந்து விடக் கூடாது.
தமிழர்களின் பாரம்பரியக் கலைகளையும், கட்டிடங்களையும் இந்தியாவின் கலைகளாகவும், இந்தியாவின் கட்டிடக் கலையாவும் கூறுவது வெறும் அபத்தம், நாங்கள், ஈழத்தமிழ்ர்கள் எப்படி இந்தியக் கலைகளில் சொந்தம் கொண்டாடுவது. தமிழ்நாட்டின் மற்ற மாநிலங்கள் உங்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அன்னியர்கள்.

