01-14-2006, 11:52 PM
Vasampu Wrote:<b>ஆரூரன்
கருத்தெழுதுவது அவரவர் சுதந்திரம். அதை அவசரப்பட்டு எழுதாமல் என்ன எழுதுகின்றோம என்று சிந்தித்து எழுதுவது சிறந்தது. எமது விடயங்களை எமக்குள்ளோ அல்லது எமது நாட்டிலேயோ எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் எமக்கு உளப்புூர்வமாக உதவ முற்பட்டாலும் அவர்கள் நாட்டின் சட்டதிட்டத்திற்கமையத்தான் செயற்படலாம். இது உமக்கு புரியாத ஒன்றல்ல. நாளை அவர்கள் எமக்காக பொடாவிலும் தடாவிலும் உள்ளே போனால் நீரும் வீணையோ புல்லாங்குழலோதான் வாசித்துக் கொண்டிருப்பீர். அது அவர்களை காப்பற்றப் போவதில்லை. மொழி சார்ந்தோ அல்லது கலை சார்ந்தோ அவர்கள் நம்முடன் இணையும் சந்தர்ப்பம் இருக்கும்போது இரு பக்க நலனும் பாதிக்கப் படாமலேயே நடந்து கொள்ள முடியும் புரிய முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.</b>
[size=14]வசம்பு!
அந்த "இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர்கள்" உதவி செய்யாது விட்டாலும், தங்களுக்குப் புரியாத, தங்களால் எந்த வித உதவியும் செய்ய முடியாத அயல் நாட்டு விடயத்தில் தங்களின் மூக்கை நுழைத்து உபத்திரவம் கொடுக்காமல் இருக்க மாட்டார்களா என்பது தான் என்னுடைய நப்பாசை.
சனநாயகத்திற்கு முழுவதும் எதிரான பொடாவையும், தடாவையும் தங்கள் நாட்டில் வைத்திருப்பது மட்டுமல்லாமல், அதைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொள்பவர்களுக்கும், அத்தகைய பொடாவினதும், தடாவினதும் பயங்கர விளைவுகளையும் எண்ணாது எங்களுக்காக குரல் கொடுப்பவர்களை ஏளனம் செய்பவர்களுக்கும், எங்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியோ அதன் தலைவர்களைப் பற்றியோ கருத்துச் சொல்லத் தகுதி கிடையாது என்பது தான் என்னுடைய பணிவான கருத்தாகும்.
நான் <b>தார்மீக முறையிலாவது ஆதரிக்க மறுப்பவர்கள்</b> என்று தான் சொன்னேனே தவிர, அவர்களை அவர்களின் நாட்டின் சட்டத்தை மீறுங்கள் என்று சொல்லவில்லை

