01-14-2006, 10:31 PM
Vasampu Wrote:குறு}க்ஸ்
நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் நாங்களும் சிலவற்றைச் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். நீங்கள் சொல்வது போல் ஒரு நிகழ்வை அவர்கள் பிரசுரித்து விட்டார்கள் என்று வைப்போமே. அதனால் அவர்களுக்கு வேறு விதமான முத்திரை குத்தப் படாதென்று உங்களால் உத்தரவாதம் தர முடீயுமா. <b>நிச்சயம் அவர்கள் தமிழ்ச் சங்கமெனும் போது தமிழ் மொழி சார் நிகழ்வுகளையே எதிர்பார்ப்பார்கள். ஆனால் நாங்கள் தான் எந்த விடயத்தை எடுத்தாலும் அதனுள் போராட்டத்தையும் உட்புகுத்தி விடுகின்றோம்.</b> இதனாலேயே பல பிரைச்சினைகளையும் எதிர் நோக்குகின்றோம்.
<span style='color:green'>வீடெரியும் போது வீணை வாசிக்கவா முடியும்? என்ன கிடைக்கிறதோ அதைப் பாவித்து நெருப்பை அணைக்கத் தான் முயற்சிப்பார்கள். அதே நிலையில் தான் இலங்கைத் தமிழர்களும் உள்ளார்கள், என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் அதைப் பாவித்து தங்களின் விடுதலைப் போராட்டத்தை மற்றவர்களுக்கு அறியப்படுத்தவும், தங்களின் போராட்டத்தின் நியாயங்களை எடுத்துச் சொல்லவும் முயற்சிக்கிறார்கள், அதில் ஏதும் தவறுள்ளதாகப் படவில்லை.
பல விடுதலைப் போராட்டங்கள் தங்களுடைய எல்லா விழாக்களையும் விடுதலைப் போரின் விளம்பரத்துக்காகப் பயன்படுத்தினார்கள்.
உதாரணமாக கம்யூனிஸ்டுக்களுக்கெதிரான போராட்டத்தில் போலந்தின் கத்தோலிக்க ஆலயங்களும் திருச்சபையும் பெரும்பங்காற்றியன. ஒவ்வொரு ஞாயிறு பூசையையும், பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தினார்கள். பலஸ்தீனியர்களின் திருமணங்கள் கூட அவர்களின் விடுதலைப் போரை நினைவுறுத்தும் விதமாகத் வானத்தை நோக்கித் துப்பாக்கியால சுடுவதுடன் தான் நிறைவு பெறுகிறது.
([size=9]நான் அவருக்குக் கருத்துத் தெரிவிப்பதை வசம்பு அவர்கள் எதிர்க்க மாட்டாரென்று நம்புகிறேன்</span>.)

