01-14-2006, 09:11 PM
<span style='color:green'>வழக்கம் போல இந்தத் தலைப்பும் திட்டமிட்டபடி திசைமாற்றப் பட்டு விட்டது. மன்னிக்கவும் ஆனால் திரு குருவி அவர்களின் சில கருத்துகள் கிட்டத்தட்ட \"விடிய விடிய ராமர் கதை விடிஞ்ச பிறகு ராமருக்குச் சீதை என்ன முறையென்று கேட்பது போன்றுள்ளது.
இந்த விடயத்தை நான் இங்கு பதிவு செய்த காரணமே செல்வி, ரேணுகா குமாரசாமியின் \"Tamil roots of Bharatha
Natyam (Sathir) என்ற கட்டுரையிலுள்ள உண்மைகளை மற்ற தமிழர்களும் அறிய வேண்டும் என்பதற்காகத் தான்.
அந்தக் கட்டுரைக்கான URL ஐ மேலே தந்துள்ளேன். குருவியார் அவர்கள் அதை முழுவதுமாக வாசித்திருந்தால், அவருடைய கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் அதிலிருப்பதை அறிவார்.
அதில் சதிராட்டம் என்ற தமிழரின் நாட்டியவடிவம் எப்படி இன்றைய பரதநாட்டியமாகியது. சதிராட்டத்துக்கு, மீண்டும் உயிர் கொடுத்து வளர்த்த நட்டுவனார்கள், தஞ்சாவூர்ச் சகோதரர்கள் பொன்னையா, சின்னையா, வடிவேலுவைப் பற்றியும், கிருஷ்ணையர் எதற்காக பரத நாட்டியமென்று பெயர் மாற்றம் செய்தாரென்றும் கூறுகிறார். ஆனால் அவருக்குப் பின்னால் வந்தவர்கள், சதிராட்டத்தைச் சமஸ்கிருதமயமாக்கி, அதன் வரலாற்றையும் திரித்து, தமிழரின் நாட்டியக் கலையை, தமிழருடையதில்லாதாதாக்கித் தமிழராகிய நாங்களே எங்களுக்குச் சொந்தமானதல்ல என்று வாதாட வைத்து விட்ட பரிதாப நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள் என்பது தான்.
என்னுடைய நோக்கமெல்லாம் பரதநாட்டியத்தின் வேர்கள் தமிழரின் கலாச்சாத்திலும், வரலாற்றிலும் உள்ளதென்பதை எடுத்துச் சொல்வது தான். ஆனால் குருவியார் அவர்களோ இந்து சமயத்திற்கும், தமிழருக்குமென்ன தொடர்பு என்பதைத் தான் கூடுதலாக ஆராய விரும்புகிறார் போல் தோன்றுகிறது
<span style='color:green'>முற்றிலும் உண்மை, அதற்காக பரதநாட்டியத்தின் தொடக்கம் தமிழ்நாட்டில் அதுவும் பரதநாட்டியம் என்பது பண்டைத் தமிழரின் கலைவடிவமாகிய சதிராட்டத்துக்கு கிருஸ்ணையர் கொடுத்த பெயர் என்பதை யாரும் மறுக்கவுமில்லை.
தமிழரசர்களின் தென்னிந்திய முழுவதுமான ஆட்சியிலும், தமிழரல்லாத தென்னிந்தியர் தமிழரின் நாட்டையாண்ட போதும் தமிழரின் நாட்டியக் கலை மற்றப் பகுதிகளுக்குப் பரவியது. <b>இன்றும் கர்நாடகமோ, அல்லது ஆந்திராவோ பரதநாட்டியத்தை தங்களின் மாநிலத்துக்குரிய நடனமாகக் கொள்வதில்லை.அது தமிழ்நாட்டின் நடனக் கலையாக மட்டுமே கருதப்படுகிறது.</b>
உதாரணமாக ஜப்பான் நாடு கார் உற்பத்தியில் முன்னணியில் நிற்கிறது என்பதற்காக காரை கண்டு பிடித்தவர்கள் ஜப்பானியர் என்று யாரும் வாதாடுவதில்லை
<span style='color:green'>1930 இல் கிருஷ்ணையர் பரதநாட்டியம் என்று பெயர் மாற்றும் வரை பரதநாட்டியத்துக்குப் பெயர் <b>சதிர்.</b> அறிஞர் வி.கல்யாணசுந்தரத்தின் ஆராய்ச்சியின் படி சதிராட்டம் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு, சமஸ்கிருத, தெலுங்குக் கீர்த்தனங்களுக்கு நாட்டியம் ஆடப்படுகிறதே தவிர நாட்டிய வடிவமும் , அதன் வழக்கும் மாறவில்லை. பல பரதநாட்டியத்தின் பாவிக்கப்படும் சொற்பதங்களின் தமிழ் வேர்ச்சொல்களை சொல்லிலக்கணப் (Etymology)படி நான் மேலே தந்துள்ளேன். அந்தத் தமிழ்ச்சொற்கள் சமஸ்கிருதத் தொனியில் திரிபு படுத்தப்பட்டுள்ளது
<span style='color:green'>நாட்டிய சாஸ்திரம் வடமொழியில் இயற்றப்படுவதற்கு நூறாண்டுகளுக்கு* முன்பே தமிழரிடம் நடனவடிவங்கள் இருந்தன என்பதற்கு சிலப்பதிகாரம் நல்ல ஆதாரமாகும். நாட்டிய சாஸ்திரம் கூட தமிழரின் நாட்டிய நன்னூல் என்னும் நூலைத் தழுவியது என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.
இந்து சமயம் எப்படிப் பெரும்பான்மையான தமிழர்களின் மதமாக மாறியதென்பதும், சிவன் உண்மையில் தமிழ்க்கடவுளா அல்ல்து பார்ப்பனர்களின் கடவுளர்
பண்டைத் தமிழர்களின் கடவுள்களுடன் இணைக்கப் பட்டதால் வந்ததா என்பது வாதாடக் கூடிய இன்னொரு விடயம். இந்தத் தலைப்பில் பரதநாட்டிய(சதிர்)த்தின் வேர்கள் தமிழரிடமுண்டா அல்லது இரவல் வாங்கியதா என்பதை மட்டும் கதைப்போமா
<span style='color:green'><b>நீங்கள் சொல்வது உண்மை, இப்பொழுது நீங்களும், நானும் தூயவனும் ஒன்றையே பேசுகிறோம்</b>. 1930 வரை சதிராட்டம் என்று தமிழ்நாட்டில் ஆடப்பட்டு வந்த தமிழரின் நாட்டிய வடிவத்துக்குள் எப்படி பரதமுனிவரும், வேதங்களும், கந்தர்வர்களும், அப்சராக்களும், பிரம்மாவும் வந்தார்கள்.
<b>இதைத்தான் தமிழெதிரிகளின் சதி என்கிறார் செல்வி. குமாரசாமி தன்னுடைய கட்டுரையில்</b>. தமிழரிடம் ஒன்றுமில்லை அவர்கள் காட்டுமிராண்டிகள், வடமொழி தான் தமிழிலுள்ள வளத்திற்கெல்லாம் காரணம், தமிழர் எல்லாவற்றையும் ஆரியர்களிடமிருந்தும், வடமொழியிலிருந்தும் தான் பெற்றுக் கொண்டார்கள். தொல்காப்பியர் கூடத் தமிழரில்லை. அகத்தியர் கூட வட்க்கிலிருந்து வந்து தான் தமிழைத் தந்தார் என்பது தமிழெதிரிகள் கட்டிய கட்டுக் கதை.
இந்த நூற்றாண்டிலேயே எங்கள் கண்முன்னாலேயே தமிழரின் சதிராட்டத்துக்குப் பெயரை மாற்றி ஒரு இதிகாசத் தொடர்புக் கதையைக் கட்டியவர்கள், முற்காலத்தில் எப்படியெல்லாம் தமிழரின் காதில் பூச்சுற்றியிருப்பார்கள் என்று சிந்தியுங்கள்.
இன்று கிறிஸ்தவத் தமிழர்கள், ஜேசு காவியத்தையும், வீரமாமுனிவரின் தேம்பாவணியையும், பைபிள் கதைகளையும் பரதநாட்டியத்தில் கலை வடிவமாக்கி மகிழ்கிறார்கள். அதே போன்று தான் சைவத் தமிழர்கள் தங்களுடைய புராணக்கதைகளை சதிராட்டத்தில் கலைவடிவமாக்கினார்கள்.
இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பின்பு, கிறிஸ்தவர்கள் பைபிள் கதைகளைப் பரதநாட்டியத்தில் ஆடியதைப் பார்த்த இன்னுமொரு குருவியார், கிறிஸ்தவக் கதைகளைப் பரதநாட்டியத்தில் ஆடியுள்ளார்கள், அதனால் போத்துக்கீசர் தான் பரதநாட்டியத்தைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தியிருக்க வேண்டுமென்று சொன்னால் எப்படியிருக்குமோ அப்படியானது தான் இடையில் இணைக்கப் பட்ட புராணக் கட்டுக் கதைகளை உதாரணம் காட்டித் தமிழருடைய கலை தான் பரதநாட்டியம் என்றழைக்கபடும் அல்லது சதிராட்டம் என்பதை மறுப்பதும்
[size=15]<b>\"When the roots of Sathir, runs strong and deep in the Tamil culture, how did its Tamil origin get overshadowed? First, a new name (Bharatha Natyam ) is given to this ancient dance form, followed by an elegant explanation for this new name (Bhava, Raga, Thala). Eventually, even the origin is attributed to someone (Bharatha Muni ), who happens to have a name very similar to this new name for the dance. Combining all these elements, a beautiful and elegant mythology is fabricated, which when repeated enough number of times, is accepted as fact, by the majority. Before mindlessly repeating this myth, the Tamils need to pause and ponder on the effect of this myth. For, the net effect of this myth, whether perpetuated intentionally or unintentionally, is to distort and deny the Tamil roots of Bharatha Natyam (Sathir).\"
[b]( The Tamil Roots of Bharatha Natyam (Sathir) by Renuka Kumarasamy
</b></span>
<span style='color:green'>பார்ப்பானிய சிந்தனைகளுக்கேற்ப திட்டமிட்டபடி பரதநாட்டியம் மாற்றபட்டு விட்டதென்பது உண்மை, <b>தமிழரின் சதிராட்டத்துக்கிருந்த அவப்பெயரை நீக்கித் தமிழரின் கலைவடிவத்தை அழிந்து போகாமல் காத்த பெருமை தஞ்சாவூர்ச் சகோதரர்களுக்கும், கிருஸ்ணையர், பாலசரஸ்வதி, ருக்மணிதேவி அருண்டேல் போன்ற பிராமணர்களைத் தான் சேரும்,</b>
கிருஸ்ணையர் சதிராட்டத்துடன் படிந்த களங்கத்தைப் போக்கும் நல்ல நோக்குடன் தான் பரதநாட்டியமென்று பெயரை மாற்றினார். ஆனால் அவருக்குப் பின்னால் வந்தவர்கள் ஓரு இதிகாசக் கட்டுக்கதையை பரதநாட்டியம் என்ற பெயருடன் தொடர்புள்ளதாக இயற்றி தமிழுக்கும், பரதநட்டியத்துக்குமுள்ள தொடர்பை மறைத்து விட்டார்கள், அதைத் தமிழர்களாகிய நாங்களும் கிளிப்பிள்ளைகளாகத் திருப்பி மற்றவர்களிடம் சொல்வதை நிறுத்த வேண்டுமென்ற நோக்கில் தான் இந்த விடயத்தை இங்கு பதித்தேன்.
எந்த நாட்டு ஆடல் கலையும் பெண்களால் தான் வளர்ந்தது. கதைக்கேற்ப ஆண்களும் பரதமாடுவதுண்டு. எந்தவொரு உலகநாட்டு சரித்திரத்தை எடுத்துப் பார்த்தாலும், அரசர்களை மகிழவிக்கத் தான் கலை வடிவங்கள் பயன் படுத்தப் பட்டன, தமிழரின் வரலாறு மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆஸ்திரிய அரசனின் ஆதரவில்லாமல் ஒரு மொசாட்(Mozart) உருவாகியிருக்க முடியாது. ஜேர்மனியின் King Ludwig இல்லாமல் ஒரு Wagner அல்லது ரஸ்யாவின் சார் அரசபரம்பரையின் ஆதரவில்லாமல் Balet நடனம் வளர்ச்சியடைந்திருக்க முடியாது.
அதேபோல் தமிழ்க் கலைவடிவங்களும் அரசர்களை மகிழவிக்கவும், ஆலயங்களில் ஆடவும் பாவிக்கப் பட்டது. கலைஞர்கள் அவர்களால் பராமரிக்கப் பட்டார்கள். மகிழ்ச்சியையும், இன்பத்தையும் மனிதர்களுக்குத் தருவதை விட எந்தக் கலைவடிவத்தினதும் நோக்கம் வேறென்னவாக இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள் குருவியாரே?
</span>

Quote:[size=12]தற்போதைய பரதநாட்டியம் என்பது ஒரு பகுதி திராவிட பிராந்தியத்தியம் (தென்னிந்தியா - தமிழ்நாடு தெற்கு கர்நாடகம்..மைசூர் உள்ளடங்கியது) சார்ந்த நடன மூலத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டு தேவதாசிகள் வழி பரப்பப்பட்ட இந்து சமய அடிப்படைகளை சிந்தனைகளை காவிச் செல்லும் ஒரு கலைவடிவமாகவே இனங்காணப்படுகிறது</span>
<span style='color:green'>முற்றிலும் உண்மை, அதற்காக பரதநாட்டியத்தின் தொடக்கம் தமிழ்நாட்டில் அதுவும் பரதநாட்டியம் என்பது பண்டைத் தமிழரின் கலைவடிவமாகிய சதிராட்டத்துக்கு கிருஸ்ணையர் கொடுத்த பெயர் என்பதை யாரும் மறுக்கவுமில்லை.
தமிழரசர்களின் தென்னிந்திய முழுவதுமான ஆட்சியிலும், தமிழரல்லாத தென்னிந்தியர் தமிழரின் நாட்டையாண்ட போதும் தமிழரின் நாட்டியக் கலை மற்றப் பகுதிகளுக்குப் பரவியது. <b>இன்றும் கர்நாடகமோ, அல்லது ஆந்திராவோ பரதநாட்டியத்தை தங்களின் மாநிலத்துக்குரிய நடனமாகக் கொள்வதில்லை.அது தமிழ்நாட்டின் நடனக் கலையாக மட்டுமே கருதப்படுகிறது.</b>
உதாரணமாக ஜப்பான் நாடு கார் உற்பத்தியில் முன்னணியில் நிற்கிறது என்பதற்காக காரை கண்டு பிடித்தவர்கள் ஜப்பானியர் என்று யாரும் வாதாடுவதில்லை
Quote:[size=12]இங்கும் கூட பல சர்சைக்குரிய திரிபுகளுக்கு இடமிருக்கிறது. இன்றைய பரத நாட்டியத்தின் வடிவமும் தமிழர்கள் தந்த நாட்டியத்தின் வடிவமும் ஒன்றா என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது..???! அன்றைய நாட்டிய வடிவம் என்பதை அடிப்படையாக கொண்ட இன்றைய பரதநாட்டியம் என்பதுக்கு பரதநாட்டியம் என்று பெயரிட்டதே கிருஷ்ணையர்தான்..! தமிழர்கள் தங்கள் நடனத்துக்கு தந்த பெயர் என்ன...??! அதன் உண்மை வழக்கு என்ன..??! </span>
<span style='color:green'>1930 இல் கிருஷ்ணையர் பரதநாட்டியம் என்று பெயர் மாற்றும் வரை பரதநாட்டியத்துக்குப் பெயர் <b>சதிர்.</b> அறிஞர் வி.கல்யாணசுந்தரத்தின் ஆராய்ச்சியின் படி சதிராட்டம் சமஸ்கிருதமயமாக்கப் பட்டு, சமஸ்கிருத, தெலுங்குக் கீர்த்தனங்களுக்கு நாட்டியம் ஆடப்படுகிறதே தவிர நாட்டிய வடிவமும் , அதன் வழக்கும் மாறவில்லை. பல பரதநாட்டியத்தின் பாவிக்கப்படும் சொற்பதங்களின் தமிழ் வேர்ச்சொல்களை சொல்லிலக்கணப் (Etymology)படி நான் மேலே தந்துள்ளேன். அந்தத் தமிழ்ச்சொற்கள் சமஸ்கிருதத் தொனியில் திரிபு படுத்தப்பட்டுள்ளது
Quote:[size=12]இன்றைய நாட்டிய சாஸ்திரம் என்பது தமிழர்களின் நடன இலக்கணத்தை அப்படியே உள்வாங்கிய ஒன்றா..??! அப்படி என்றால் சிவனுக்காக (தமிழர்களால் பார்ப்பர்ணிய சித்தரிப்புகளாக இனங்காணப்படும் கடவுள்களுக்கும் இக்கலைக்கும் இடையில் எப்படித் தொடர்பு வந்தது..!) சமர்ப்பிக்கப்படுவதாகச் சொல்லப்படும் இந்தப் பரதநாட்டியம் என்பதில் தமிழர்கள் பார்வையில் சிவன் யார்..???! அவருக்கும் தமிழர்க்களுக்கு உள்ள தொடர்பு என்ன..??!</span>
<span style='color:green'>நாட்டிய சாஸ்திரம் வடமொழியில் இயற்றப்படுவதற்கு நூறாண்டுகளுக்கு* முன்பே தமிழரிடம் நடனவடிவங்கள் இருந்தன என்பதற்கு சிலப்பதிகாரம் நல்ல ஆதாரமாகும். நாட்டிய சாஸ்திரம் கூட தமிழரின் நாட்டிய நன்னூல் என்னும் நூலைத் தழுவியது என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.
இந்து சமயம் எப்படிப் பெரும்பான்மையான தமிழர்களின் மதமாக மாறியதென்பதும், சிவன் உண்மையில் தமிழ்க்கடவுளா அல்ல்து பார்ப்பனர்களின் கடவுளர்
பண்டைத் தமிழர்களின் கடவுள்களுடன் இணைக்கப் பட்டதால் வந்ததா என்பது வாதாடக் கூடிய இன்னொரு விடயம். இந்தத் தலைப்பில் பரதநாட்டிய(சதிர்)த்தின் வேர்கள் தமிழரிடமுண்டா அல்லது இரவல் வாங்கியதா என்பதை மட்டும் கதைப்போமா
Quote:[size=9]\"The term Bharatnatyam was introduced in the mid thirties by S. Krishna Iyer and later spread by Rukminidevi Arundale. It comprises of Bhava,Raga, Tala, and Natya put together as Bharatanatyam.\"
\"Natyashastra is often reffered to as the Bible of Indian classical dance. It is said that the Gods and Godesses pleaded Brahma [the creator, as per Hindu Mythology] for the creation of another Veda, that was understandable by common man. So, Brahma created the fifth Veda, which is a combination of the existing four vedas [ Rig, Yajur, Sama, and Atharva Veda]. He propogated this veda on earth through Sage Bharatha, who wrote it down as Natyashastra. Brahma took pathya [ words ] from the Rig veda, Abhinaya [ communicative elements of the body movements] from the Yajur Veda, Geeth [ music and chant] from the Sama Veda, and Rasa [vital sentiment, an emotional element] from Atharva veda, to form the fifth veda - the Natya Veda. Bharatha, together with groups of Gandharvas and Apsaras performed Natya, Nrtta, and Nrtya before Lord Shiva [the Lord of Devine Dance]. Thus Natya became the authoritative form of classical Indian dances. The term \"Bharatnatyam\" partly owes it's name to Sage Bharatha.\"
http://library.thinkquest.org/04oct/01260/...0/history1.html </span>
Quote:இப்படி நிறைய வினாக்களை பரதநாட்டியம் என்று இன்று ஆடப்படும் நடனமும் அதற்குத் தரப்படும் விளக்கங்களும் எமக்குள் எழுப்பிச் செல்கின்றன..! இதற்கு விடைகள் தரமுடியுமா..???! ஆரூரன்..மற்றும் தூயவன்...! சும்மா வெறுமனே தற்போதைய பரதநாட்டியம் தான் தமிழர்களின் நடன வடிவம் என்று சொல்ல அதற்கு தலையாட்டும் நிலை எமக்கு வேண்டாம்..! தமிழர்களின் பாரம்பரிய நடனங்களுள் கும்மி மயிலாட்டம் கைச்சிலம்பாட்டம் பொம்மலாட்டம் என்று பலவடிவங்கள் இருக்க அதற்குள் புகுந்துகொள்ளாத சிவனும் பிரமாவும் வேதமும் மற்றவைகளும் இதற்குள் ஏன் புகுந்து கொண்டார்கள்..கொண்டன..?!
<span style='color:green'><b>நீங்கள் சொல்வது உண்மை, இப்பொழுது நீங்களும், நானும் தூயவனும் ஒன்றையே பேசுகிறோம்</b>. 1930 வரை சதிராட்டம் என்று தமிழ்நாட்டில் ஆடப்பட்டு வந்த தமிழரின் நாட்டிய வடிவத்துக்குள் எப்படி பரதமுனிவரும், வேதங்களும், கந்தர்வர்களும், அப்சராக்களும், பிரம்மாவும் வந்தார்கள்.
<b>இதைத்தான் தமிழெதிரிகளின் சதி என்கிறார் செல்வி. குமாரசாமி தன்னுடைய கட்டுரையில்</b>. தமிழரிடம் ஒன்றுமில்லை அவர்கள் காட்டுமிராண்டிகள், வடமொழி தான் தமிழிலுள்ள வளத்திற்கெல்லாம் காரணம், தமிழர் எல்லாவற்றையும் ஆரியர்களிடமிருந்தும், வடமொழியிலிருந்தும் தான் பெற்றுக் கொண்டார்கள். தொல்காப்பியர் கூடத் தமிழரில்லை. அகத்தியர் கூட வட்க்கிலிருந்து வந்து தான் தமிழைத் தந்தார் என்பது தமிழெதிரிகள் கட்டிய கட்டுக் கதை.
இந்த நூற்றாண்டிலேயே எங்கள் கண்முன்னாலேயே தமிழரின் சதிராட்டத்துக்குப் பெயரை மாற்றி ஒரு இதிகாசத் தொடர்புக் கதையைக் கட்டியவர்கள், முற்காலத்தில் எப்படியெல்லாம் தமிழரின் காதில் பூச்சுற்றியிருப்பார்கள் என்று சிந்தியுங்கள்.
இன்று கிறிஸ்தவத் தமிழர்கள், ஜேசு காவியத்தையும், வீரமாமுனிவரின் தேம்பாவணியையும், பைபிள் கதைகளையும் பரதநாட்டியத்தில் கலை வடிவமாக்கி மகிழ்கிறார்கள். அதே போன்று தான் சைவத் தமிழர்கள் தங்களுடைய புராணக்கதைகளை சதிராட்டத்தில் கலைவடிவமாக்கினார்கள்.
இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பின்பு, கிறிஸ்தவர்கள் பைபிள் கதைகளைப் பரதநாட்டியத்தில் ஆடியதைப் பார்த்த இன்னுமொரு குருவியார், கிறிஸ்தவக் கதைகளைப் பரதநாட்டியத்தில் ஆடியுள்ளார்கள், அதனால் போத்துக்கீசர் தான் பரதநாட்டியத்தைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தியிருக்க வேண்டுமென்று சொன்னால் எப்படியிருக்குமோ அப்படியானது தான் இடையில் இணைக்கப் பட்ட புராணக் கட்டுக் கதைகளை உதாரணம் காட்டித் தமிழருடைய கலை தான் பரதநாட்டியம் என்றழைக்கபடும் அல்லது சதிராட்டம் என்பதை மறுப்பதும்
[size=15]<b>\"When the roots of Sathir, runs strong and deep in the Tamil culture, how did its Tamil origin get overshadowed? First, a new name (Bharatha Natyam ) is given to this ancient dance form, followed by an elegant explanation for this new name (Bhava, Raga, Thala). Eventually, even the origin is attributed to someone (Bharatha Muni ), who happens to have a name very similar to this new name for the dance. Combining all these elements, a beautiful and elegant mythology is fabricated, which when repeated enough number of times, is accepted as fact, by the majority. Before mindlessly repeating this myth, the Tamils need to pause and ponder on the effect of this myth. For, the net effect of this myth, whether perpetuated intentionally or unintentionally, is to distort and deny the Tamil roots of Bharatha Natyam (Sathir).\"
[b]( The Tamil Roots of Bharatha Natyam (Sathir) by Renuka Kumarasamy
</b></span>Quote:அந்த வகையில் பரதநாட்டியம் என்பதற்கும் ஒரு தமிழ் வடிவம் இருந்திருக்கும்..அது காலப்போக்கில் மாற்றமடைந்து அல்லது மாற்றி அமைக்கப்பட்டு பார்ப்பர்ணிய சிந்தனைகளுக்கு ஏற்ப மேற்குடி ஆண்களை மகிழ்விக்க பெண்களை மேடையேற்றி பொம்மைகளாக்கி ஆட வைக்கும் நிலையுமே தொடர்ந்துள்ளது..! இந்தப் பரதநாட்டியத்தில் ஆண்களுக்கான நடன வடிவம் பெறாத பிரசித்தத்தை எப்படி பெண்களுக்கான வடிவம் பெற்றுக்கொண்டது..??! பெண்களை இப்படி பொம்மைகளாக்கி மகிழ்வதுதான் தமிழர்களின் நடன அமைப்பின் தேவையாக இருந்ததோ..அந்தப்புறங்களில் அரசர்களை மகிழ்விக்க ஆடப்பட்டதும் இதுவோ..???! அதுதான் தமிழர்களின் உண்மைக் கலைவடிவத்தின் நோக்கமோ..??!