01-14-2006, 05:56 PM
தூயவன் Wrote:இழக்கப்பட்டதைப் பொறுவது தான் போராட்டமே தவிர, இழக்கப்பட்டதற்காக புறம் தள்ளுவது கிடையாது. அப்படியென்றால் எல்லாப் போராட்டங்களும் வீண்.
இப்போது சொல்லுங்கள். நான் சிங்கள கலைநிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டில் ஆடப்படும் கரகாட்டம், பொம்மலாட்டம் போன்றவை போல ஆடப்படுவதைக் கண்டிருக்கின்றேன். எனவே சிங்களவரிடம் இருந்து தான் அது தமிழனுக்குப் போயிருக்குமா?
தமிழர்கள் இழந்ததை பெற முயற்சிப்பதிலும் இழக்க இன்னும் என்ன இருக்கிறது அதால் தாங்கள் இன்னொருவராக மாற முடியுமோ என்றுதான் அதிகம் சிந்திக்கிறார்கள்..! அதுதான் தமிழர்களின் நிலை...இன்று..! தமிழர்களில் எத்தனை பேர் தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளை மீட்ட பழகி இருக்கிறார்கள் கைவிரல் விட்டு என்னலாம்..! மேற்கத்தேய இசைக்கருவிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் தங்கள் பாரம்பரிய இசைக்கருவிகளுக்கு கொடுப்பதில்லை..! இப்படித்தான் பரதநாட்டியத்திலும்.. நாங்களே ஒரு ஆசிரியரிடம் கேட்டோம் ஏன் தமிழ் கீர்த்தனைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கலாமே என்று அதற்கு அவர்கள் சொன்னது பெரிய பெரிய வித்துவான்கள் எல்லாம் கர்நாடக சங்கீத கீர்த்தனைகளுக்குத்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று..! தாங்கள் சிலது மட்டும் தமிழில் சொல்லிக் கொடுக்கினமாம்...! விளங்காததை விளக்கமில்லாமலே செய்து காட்டி அதில் பெருமை பேசுவதில் தமிழர்களை விட வேறு எவரும் இருக்க முடியாது..!
சிங்களவர்களின் நடனங்களில் நிச்சயமாக தமிழ் நடன முறைக்குப் பிறம்பான சில வித்தியாசங்கள் இருக்கு..! ஆனால் தமிழர்களைப் போல தங்களதுக்குள்ளேயே மற்றவருடையதை உள்வாங்கி தன்னை மற்றவனாகப் பாவனை செய்வது பெருமை பேசுவது போல அங்கில்லை எனலாம்..! இப்போ சிங்களவர்களும் மாறித்தான் வருகிறார்கள்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

