Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாக்குதல் நிறுத்தப்படாவிடின் சிறிய முகாம்கள் தாக்கப்படும்
#1
சனி 14-01-2006 14:41 மணி தமிழீழம் [நிருபர் மகான்]

மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படாவிடின் சிறிய முகாம்கள் தாக்கப்படும்: பொங்கி எழும் மக்கள் படை
அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகள் மற்றும் தாக்குதல்களை நிறுத்தாவிடின் சிறிலங்காப் படையினர் காவலரண் மற்றும் சிறிய முகாம்களை தாக்கப் போவதாக பொங்கி எழும் மக்கள் படை எச்சரிக்கைகள் விடுத்துள்ளது. இது தொடர்பாக பொங்கிஎழும் மக்கள் படை சிறிலங்கா இராணுவத்திற்கு பொங்கி எழும் மக்கள் படை எச்சரிக்கை என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழ் மக்கள் எமது போராட்ட வரலாற்றில் எமக்கெதிராக சூளுரைத்த பல சிங்களத் தலைவர்களையும் வீறாப்புப் பேசி போர் முரசு கொட்டிய இராணுவத்தளபதிகளையும் கண்டவர்கள் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முதல் பிரேமதாச, டில்கிறிட் பண்டார விஜயதுங்கா, வெண்புறா சந்திரிக்கா வரை எல்லோரும் எமது இனத்தை அழிப்பதற்கு கங்கணம் கட்டி நின்றவர்களே! இவர்கள் எங்கே போனார்கள்? இவர்களின் சூழுரைகளுக்கும், ஏவல்களுக்கும் என்ன நடந்தது. என்பது எல்லோருக்கும் வெளிச்சம்.

அத்துலத் முதலி ரஞ்சன் விஜயரெத்தினா, அனுரத்த ரத்வத்தை போன்ற பாதுகாபபு அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக விட்ட சவால்கள் யாவும் வெற்று வேட்டுக்களாகப் போன்ற வரலாறு,

பிரிக்கேடியர், விஜயதுங்க முதல் கமில்டல் வணசிங்க டென்சில் கொப்பேயக்கடுவ, ரொகான், தளுவத்த, லயன்ல் பலகல்ல என வீராப்பு பேசி போர்முரசு கொட்டி தமிழீழ படுகொலை புரிந்து தமிழ் மக்களை அடக்க நினைத்தவர் யாவரும் அடக்கிப் போனதும் வரலாறு இவ்வாறு தமிழருக்கு எதிராக சூளுரைத்த தலைவர்களும் ஒன்று திரண்ட பலத்தின் முன்னால் மண்டியிட்டு இருந்த இடம் தெரியாமல் மறைந்ததுதான் சிங்களத்தின் வரலாறு. இந்த வரிசையில் பழைய பல்லவிக்கு புதிய மெட்டமைய்த்து சிங்கள தேசத்திற்கு மங்களம் பாடப் புறப்பட்டு ………..

மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா சிங்களத்தில் இன்னுமொரு சப்புமல் குமரவாக| தன்னை நிலை நிறுத்த முயலும் சரத் பொன்சேகா தமிழ் தரப்பினரை தப்புக் கணக்குப் போடுவதுதான் வேடிக்கை.

தமிழ் மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரின் களம்பல கண்டதாக தன்மைப் பற்றி பிதற்றிக் கொள்ளும் இந்த மேஜர் ஜெனரல் அக்காலங்களில் தானும் தனது படைகளும் வாங்கிக் கட்டிக் கொண்டதை மறந்து பிதற்றுவதுதான் பரிதாபம்.

இனிவரும் காலங்களில் எமது தாக்குதல்களை விரிவுபடுத்தவுள்ளோம். எமது தாக்குதல்களுக்கு பயந்து பின்னர் வந்து அப்பாவி மக்களை தாக்குவதையும் சுட்டுக் கொலை செய்வதையும், கைது செய்வதையும் சிங்கள இராணுவம் நிறுத்தாவிடின் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் காவலரண்களையும், சிறிய படைமுகாம்களையும் தாக்குவோம் என எச்சரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

Pathivu
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
தாக்குதல் நிறுத்தப்படாவிடின் சிறிய முகாம்கள் தாக்கப்படும் - by Vaanampaadi - 01-14-2006, 10:41 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)